வெறும் 27.4 ஓவர்.. 36 வருட பெருமைக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூஸி.. இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி

0
442

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிய சச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பண்ட் மற்றும் சப்ராஸ்கான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 462 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு 107 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி கடைசி நாளில் களமிறங்கியது. தொடக்கத்தில் ஒரு மணி நேரம் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஒத்துழைக்க அதை பும்ரா நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

36 ஆண்டுகள் கழித்து வரலாற்று வெற்றி

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லதாமை 0 ரன்னில் வெளியேற்றி, அதற்குப் பிறகு டெவான் கான்வேவை 17 ரன்களில் வெளியேற்றினார். ஆனால் அதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக நிலைத்து நின்று விளையாடி அதற்கு மேல் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டு அணியை சிறப்பாக வெற்றி பெற வைத்தனர். இன்று வெறும் 27.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் வில் யங் 45 ரன்களுடனும் ரட்சின் ரவீந்திரா 39 ரன்களில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க:இந்திய தொடர்.. என்னை 9வது இடத்தில் ஆட வச்சாலும் ரெடி.. அதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கு – ஆஸி வீரர் ட்ராவிஸ் ஹெட் பேட்டி

இதன் மூலமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. 36 வருடங்களாக இந்திய அணி பெற்ற பெருமையை நியூசிலாந்து அணி தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வருகிற 24-ஆம் தேதி புனேவில் நடைபெற உள்ளது.

- Advertisement -