121-0.. கையில் இருந்த மேட்சை தோற்ற இலங்கை அணி.. நியூசி கடைசி 7 ஓவரில் அசத்தல் வெற்றி.. முதல் டி20

0
1068
NZ

நியூசிலாந்தின் தங்களது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்விக்கு அருகில் இருந்து சிறப்பாக விளையாடி கடைசியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்று இருக்கிறது.

தற்பொழுது இலங்கை அணி நியூசிலாந்துக்கு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறுகிறது. இந்த முறை நியூசிலாந்து அணி இலங்கை வந்த பொழுது அந்த அணிக்கு சுற்றுப்பயணம் நிறைய தோல்விகளால் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டேரில் மிட் சல் – பிரேஸ்வெல் அசத்தல்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசுவதாக அறிவித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் ராபின்சன் 11, ரச்சின் ரவீந்திரா 8 ரன்கள் என சீக்கிரத்தில் வெளியேறினார்கள். அடுத்து வந்த சாப்மேன் 15, கிளன் பிலிப்ஸ் 8 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து டேரில் மிட்சல் 42 பந்துகளில் 62 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் 33 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை கரை சேர்த்தார்கள். இறுதியாக 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பினுரா பெர்னாடோ, தீக்சனா மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பரிதாபமாக தோற்ற இலங்கை அணி

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவரில் 121 ரன் பார்ட்னர்ஷிப் வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ் 36 பந்தில் 46, பதும் நிசாங்கா 60 பந்தில் 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த இடத்தில் இலங்கை அணி இந்த போட்டியை வெகு எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : நிதிஷ் குமாருக்கு அது இதுவே கடைசி முறை.. இனி இந்திய அணி வேற ரூட்ல போலாம் – ரவி சாஸ்திரி பேச்சு

இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு வந்த குசால் பெரேரா 0, கமிந்து மெண்டிஸ் 0, சரித் அசலங்கா 3, ராஜபக்சே 8, ஹசரங்கா 5 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து அந்த அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. திடீரென போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு எட்டுரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் டஃபி மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -