என்னடா ஐபிஎல் தொடரில் நேற்று தோனி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய மேலே வரவில்லை. இந்த நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக தான் ஏன் பேட்டிங் செய்ய மேலே வரவில்லை என்பது குறித்து கூறியிருந்த விளக்கம் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெறுவதற்கு சிஎஸ்கே அணி பக்கத்தில் இருக்கும் பொழுது தோனி பேட்டிங் செய்ய வந்த பொழுது மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவு எதிர்ப்பாக மாறியது
இப்படி தோனிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் வழக்கம் போல் பெரிய ஆதரவை மும்பை இந்தியன்ஸ் போட்டியில் கொடுத்தார்கள். ஆனால் நேற்று ஓவருக்கு 16 ரன் தேவைப்பட்ட நிலையில், தோனி ரவிச்சந்திரன் அஸ்வினை அனுப்பிவிட்டு பேட்டிங் செய்ய வராமல் இருந்தது பெரிய கொதிப்பை சிஎஸ்கே ரசிகர்களிடையே உண்டாக்கி இருக்கிறது.
மேலும் இந்த தோல்வியை ஆர்சிபி அணிக்கு எதிராக வந்திருக்கின்ற காரணத்தினால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தான் ஏன் பேட்டிங் வரிசையில் மேலே வருவதில்லை என்று தோனி கூறி இருந்த விளக்கம் இன்னும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால்தான் மேலே வரவில்லை
இது குறித்து தோனி விளக்கம் அளித்த பொழுது ” கடந்த ஆண்டு எனக்கு முட்டி வலி இருந்த பொழுதும் கூட, ஜடேஜா மற்றும் சிவம் துபே இருவரும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதற்காக போட்டியிட்டு கொண்டு இருந்தார்கள். எனவே அவர்கள் இருவரும் இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்காக முன்கூட்டியே பேட்டிங் வரிசையில் இறங்குவதற்கு அனுமதித்திருந்தேன். நான் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு போட்டியிடவில்லை. எனவே இப்படி செய்தேன்”
இதையும் படிங்க : தோனி செய்வது அர்த்தம் இல்லாதது.. என்னாலும் இதை ஏத்துக்க முடியாது – ராபின் உத்தப்பா ஓபன் பேச்சு
“இப்படி செய்வதால் அணிக்கு எந்த தீமையும் வராது. ஏனென்றால் அவர்கள் முன்னே சென்றாலும் நன்றாக விளையாட முடிந்தவர்கள். ஒருவேளை அவர்கள் சரியாக செய்யாமல் இருந்திருந்தால் நான் மேலே சென்று விளையாடி இருப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் மற்றவர்கள் மேலே சென்று சரியாக விளையாடாத பொழுது தோனியின் நேற்று மேலே சென்று விளையாடவில்லை என தோனியின் விளக்கத்தில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.






