259 ரன்.. கேப்டன் உள்ளே வந்ததும்.. இந்திய அணி படுதோல்வி.. நியூசிலாந்து அபார வெற்றி.. மாற்றம் தேவையா?

0
331
ICT

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தற்பொழுது தொடரை தற்காலிகமாக சமநிலையில் வைத்திருக்கிறது.

நியூசிலாந்து பெண்கள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியை நியூசிலாந்து அணி வென்றிருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து கேப்டன் இன்னிங்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க வீராங்கனைகள் சூசி பேட்ஸ் 70 பந்தில் 58 ரன், ஜார்ஜியா பிளிம்பர் 50 பந்தில் 41 ரன்கள் எடுத்து வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபியா டிவைன் 86 பந்துகளில் 79 ரன்கள், மேடி கிரீன் 41 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் ராதா யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

கேப்டன் வந்ததும் தோல்வி

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 108 ரண்களுக்கு எட்டு விக்கெட் இழந்து விட்டது. இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஸ்மருதி மந்தனா 0, செபாலி வர்மா 11, யாஷிகா பாட்டியா 12, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 24, ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 17 என முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து தாக்குப் பிடித்து விளையாடிய 64 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 47.1 ஓவரில் 183 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை ஒன்றுக்கு ஒன்று என தற்பொழுது தற்காலிகமாக சமநிலை செய்திருக்கிறது.

இதையும் படிங்க: ஆஸி டெஸ்ட்.. இந்திய அணியும் கோலியும் கலக்குவாங்க.. 5 வருஷமா நான் இத பாக்கறேன் – சைமன் டால் உறுதி

இந்திய வெள்ளைப் பந்து அணிகளுக்கு கேப்டனை மாற்ற வேண்டும் என வெளியில் இருந்து நிறைய கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் இதை வற்புறுத்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் இந்திய அணி வெளியேறியிருந்தது. எனவே தற்பொழுது இந்திய பெண்கள் அணிக்கு கேப்டன் பொறுப்பில் மாற்றம் தேவைப்படுவதாக உணரப்படுகிறது!

- Advertisement -