இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது. அதே சமயத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
அணிகளின் மாற்றம்
தற்போது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் அபிஷேக் ஷர்மாவை நீக்கி ரிங்கு சிங்கை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கம்பீர் அந்த முடிவை எடுக்கவில்லை.
அதே சமயத்தில் நியூசிலாந்து அணியில் மெக்கான்சி என்ற சுழல் பந்துவீச்சாளர் நீக்கப்பட்டு ஜேக்கப் டப்பிங் எனும் வேகபந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த குறிப்பிட்ட அகமதாபாத் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்குக்கு சாதகமான சிவப்பு மண் ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியகுமார் சவால்
இந்த மைதானத்தில் ஏற்கனவே இந்திய அணி மிக முக்கியமான போட்டிகளில் தோல்வி அடைந்து வருகின்ற காரணத்தினால் அது இன்றைய போட்டியிலும் எதிரொலிக்குமா என்கின்ற கேள்வி சூரியகுமார் இடம் முன் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : இந்தியா வெறும் 2 வீரர்களை நம்பியே இருக்கு.. நியூசி டீமா ஆடறாங்க.. அதனால கம்பீருக்கு கப் கிடையாது – முகமது அமீர் பேச்சு
இதற்கு பதிலளித்துள்ள கேப்டன் சூரியகுமார் யாதவ் ” நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்யும் போது சிறப்பாக இருந்திருக்கிறோம். மேலும் இது போன்ற முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஸ்கோர் போடுவது நல்ல விஷயம். ஏற்கனவே இங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் வரலாறு. நாங்கள் இப்போது ஒரு புதிய போட்டியில் விளையாட போகிறோம். நாங்கள் ரசிகர்களுக்கு ஒரு நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். மேலும் நாங்கள் அதே அணியுடன் களம் இறங்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்.






