இந்தியா வெறும் 2 வீரர்களை நம்பியே இருக்கு.. நியூசி டீமா ஆடறாங்க.. அதனால கம்பீருக்கு கப் கிடையாது – முகமது அமீர் பேச்சு

0
8
Amir

இன்றைய டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி வெல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கூறியிருக்கிறார்.

முகமது அமீர் தொடர்ச்சியாக இந்திய அணி பல்வேறு கட்டங்களில் இந்திய அணி தோல்வி அடையும் என்று சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். ஆனால் இந்திய அணி இறுதியாக தற்பொழுது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

- Advertisement -

இரு அணிகளின் வித்தியாசம்

இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க சமூக வலைதளங்களில் முகமது அமீர் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பெருவாரியாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதற்கு மேலும் இடம் அளிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து முகமது அமீர் கூறும் போது ” நியூசிலாந்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஒரே அணியாக இணைந்து விளையாடுகிறார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதை வெளிப்படுத்தினார்கள். இந்திய அணியை எடுத்துக் கொண்டால் அப்படி கிடையாது. இந்திய அணியில் சாம்சன் மற்றும் பும்ரா இருவர் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள்”

- Advertisement -

நியூசிலாந்து வெல்லும்

“மேலும் நரேந்திர மோடி ஸ்டேடியம் நியூசிலாந்து அணிக்கு ஏற்றதாக இருக்கும். இந்தியாவை விட நல்ல பார்மில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் பும்ராவை தவிர யாரும் நல்ல பார்மில் இல்லை. வருண் மற்றும் ஹர்திக் இருவரும் தற்பொழுது சிரமப்பட்டு வருகிறார்கள்”

இதையும் படிங்க: அலாரம் வச்சு எழுந்து ஆதரவு கொடுங்க.. இந்தியாவுல சுத்தமா எங்க பக்கம் யாரும் இல்லை – சான்ட்னர் கோரிக்கை

“இரு அணிகளிலும் ஒரே மாதிரியான பேட்டிங் உள்ளது. ஆனால் பவுலிங் யூனிட் பொருத்தவரையில் நியூசிலாந்து மிகச் சிறப்பாக உள்ளது. இதில் இந்தியா பும்ராவை மட்டுமே சார்ந்துள்ளது. அதனால் நியூசிலாந்துதான் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -