விராட் கோலியுடன் எங்க பாபரை ஒப்பிடுபவர்கள் முட்டாள்கள்.. 35 சதம் முடியுமா? – கம்ரன் அக்மல் பேட்டி

0
9631
Babar

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடுபவர்கள் முட்டாள்கள் என்று மிகக் கடுமையாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறியிருக்கிறார்.

தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியை ஒட்டி இந்திய பாகிஸ்தான் வீரர்கள் பற்றிய கருத்துக்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி – பாபர் அசாம் ஒப்பீடு

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட கூடியவர்களில் மூன்று வடிவத்திலும் சேர்த்து அதிக சதங்கள் எடுத்தவராக விராட் கோலி இருக்கிறார். மேலும் அவர் மூன்று வடிவத்திலும் விளையாடிய காலம் வரையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஒரே அரிய வீரராகவும் இருக்கிறார்.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் தொடர்ந்து சீராக ரன்கள் எடுக்கக்கூடியவராக வளர்ந்தார். ஆனால் விராட் கோலி போல முக்கியமான போட்டிகளில் பெரிய ரன்கள் எடுக்கக்கூடியவராக இல்லை. மேலும் விராட் கோலி களத்தில் நின்றால் தேவைப்படும் பொழுது 200 ஸ்ட்ரைக் ரேட்டில் கூட விளையாட கூடியவர். மேலும் ஐபிஎல் தொடரில் துவக்க ஆட்டக்காரராக அதிரடியாகவும் விளையாடுவார். இந்த வகையில் பாபர் அசாம் விராட் கோலியின் அருகில் இல்லை.

- Advertisement -

விராட் கோலி உடன் ஒப்பிடாதீர்கள்

இதுகுறித்து கம்ரன் அக்மல் பேசும்பொழுது ” விராட் கோலிக்கு இணையாக பாபர் அசாமை மதிப்பிடக் கூடியவர்கள் முட்டாள்கள். விராட் உலக அளவில் ஒரு முன்மாதிரி வீரராக இருந்திருக்கிறார். அவர் மிகவும் ஆர்வத்துடன் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார். அவர் போன்ற வீரர்கள் வருவது அரிதான விஷயம். அவர் மிகப்பெரிய அளவுகோலை அமைத்திருக்கிறார். இருவருக்கும் இடையில் எந்த ஒப்பீடும் இல்லை”

இதையும் படிங்க : 2013 ரோஹித் செஞ்சத மறக்க முடியாது.. தோனி கிட்ட தொடர்ந்து பேசினார்.. அது மாஸ்டர் ஸ்ட்ரோக் – சுரேஷ் ரெய்னா பேச்சு

“விராட் கோலி பெரிய வீரராக இருந்த பொழுதும் அவரும் சில ஆண்டுகளாக ரண்களுக்கு தடுமாறி வருகிறார். மேலும் அவர் மூன்று டெஸ்ட் சதங்கள் மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் அடித்திருக்கிறார். பாபரும் ரன்கள் எடுக்க முடியாமல் இருந்து வருகிறார். அவரின் இருபதாவது ஒருநாள் சதத்திற்காக பாகிஸ்தான் முழுவதும் காத்திருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் அதை செய்ய வேண்டும். மேலும் பாபர் இறுதியாக ஒருநாள் கிரிக்கெட்டில் 35 சதங்கள் எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -