இலங்கை டி20 ODI.. நியூஸி அணிகள் அறிவிப்பு.. புதிய கேப்டன்.. வெளிநாட்டில் பிறந்தவருக்கு வாய்ப்பு

0
646
NZ

இந்த மாதத்தில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணி கடந்த மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. ஆனால் அவர்களுக்கு இந்த இலங்கை சுற்றுப்பயணம் சிறப்பானதாக அமையவில்லை. எனவே இலங்கை அணியை தங்கள் நாட்டில் வைத்து வெல்வதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

போட்டி அட்டவணைகள்

இலங்கையின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 28ஆம் தேதி ஆரம்பித்து, டிசம்பர் 30ஆம் தேதி இரண்டாவது போட்டியும், 2025 ஜனவரி 2ஆம் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெற இருக்கிறது.

இது தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 20 அணிகளுக்கும் இடையே நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 5ஆம் தேதியும் இரண்டாவது போட்டி ஜனவரி 8ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

புதிய கேப்டன் அறிவிப்பு

நியூசிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கு நிரந்தரமான புதிய கேப்டனாக மிட்சல் சான்ட்னர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த பெவன் ஜேக்கப்ஸ் நியூசிலாந்து அணிக்காக டி20 தொடரில் அறிமுகமாக இருக்கிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஐபிஎல் தொடருக்கு வாங்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் அணியிலும் கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை.

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன் மற்றும் நாதன் ஸ்மித்.

இதையும் படிங்க : கில் புத்திசாலியா மாறனும்.. இந்த தப்புகளை சரி செய்யனும்.. இல்லனா கஷ்டம் – புஜாரா அறிவுரை

நியூசிலாந்து ஒருநாள் அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரன், நாதன் ஸ்மித் மற்றும் வில் யங்.

- Advertisement -