இந்திய கிரிக்கெட்

இந்தியா ODI டி20 தொடர்.. நியூசிலாந்து அணி அறிவிப்பு.. புதிய திட்டங்கள்.. ஸ்டார் வீரர் இல்லை

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நியூசிலாந்து இந்தியாவிற்கு வந்து ஒன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாட இருக்கும் டி20 தொடர் என்கின்ற காரணத்தினால், இந்த தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

புதிய திட்டம்

இதில் முதலில் ஜனவரி 11, 14, 18 தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை. அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் முக்கிய வீரர்கள் பலர் இடம் பெறவில்லை. டி20 தொடருக்கு மட்டுமே வழக்கமான நியூசிலாந்து அணி களம் இறங்க இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக மிட்சல் சான்ட்னர் தொடர்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிகள்

டி20 அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே மற்றும் வில் யங்.

இதையும் படிங்க : அப்போ தோனியின் நிலைமைதான் இப்போ சூர்யாவுக்கும்.. அவர மாதிரி இருக்கறதுனால கவலைப்பட அவசியமில்லை – ராபின் உத்தப்பா

ஒருநாள் அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன் மற்றும் இஷ் சோதி.

- Advertisement -
Published by
Tags: Ind vs Nz