உலக கிரிக்கெட்

601 ரன்.. 3 மெகா சதங்கள்.. ஜிம்பாப்வேவை புரட்டி எடுத்த நியூசிலாந்து அணி.. அதிரடியான 2வது டெஸ்ட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி அபாரமான முன்னிலையை பெற்று இருக்கிறது.

- Advertisement -

தற்போது நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

மேட் ஹென்றி அபாரம்

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி மொத்தம் 48.5 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 மற்றும் போல்க்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 107 பந்துகளை சந்தித்து விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மெகா 3 சதங்கள்

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே அபாரமாக விளையாடி சதமடித்து 245 பந்துகளை சந்தித்து விளையாடி 18 பவுண்டரிகள் உடன் 153 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 111 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : கில் மேல சந்தேகம் போனது அந்த 2வது சம்பவத்தாலதான்.. சொல்லி முடிச்சிட்டாரு – பார்த்திவ் படேல் பேச்சு

இதற்கு அடுத்து ஹென்றி நிக்கோலஸ் 245 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 150 ரன்கள், ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 139 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 165 இருவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இந்த போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்திருக்கிறது. மேலும் முதல் இன்னிங்ஸில் 476 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts