319-8.. வில்லியம்சன் விளாசல்.. இங்கிலாந்து அணியுடன் இந்தியாவுக்கும் சிக்கல்.. நியூசி முதல் இன்னிங்ஸ் அசத்தல்

0
540
Williamson

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் வின்னிங்சில் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் சிறப்பான பேட்டிங்கால் நல்ல நிலையை எட்டி இருக்கிறது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த மூன்று போட்டிகளையும் வென்றால் நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம் பேக் வில்லியம்சன்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டாம் லாதம் அதிரடியாக 54 பந்தில் 6 பவுண்டரிகள் உடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய தொடரில் காயத்தால் விளையாடாத கேன் வில்லியம்சன் 197 பந்துகள் சந்தித்து 10 பவுண்டரிகள் உடன் 91 ரன் எடுத்து ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார். அடுத்து ரச்சின் ரவீந்திரா 49 பந்தில் 34 ரன்கள், கிளன் பிலிப்ஸ் ஆட்டம் இழக்காமல் 58 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து செய்த ஒரு தவறு

இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 83 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருக்கிறது. நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட்டையும் வென்றால் அது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கலை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விற்கப்படாத பிரித்வி ஷா.. என்னால இவ்வளவு தான் சொல்ல முடியும் – ரிக்கி பாண்டிங் வருத்தம்

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நியூசிலாந்து அணியில் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்களான ரச்சின் ரவீந்திர மற்றும் பிலிப்ஸ் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இந்திய தொடரில் அசத்திய முழு நேர சுழல் பந்துவீச்சாளர்கள் சான்ட்னர் மற்றும் அஜாஸ் படேல் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்குமா? என அடுத்த நான்கு நாட்களில் தெரியும்!

- Advertisement -