212 டு 303.. சான்ட்னர் காட்டிய மாஸ்.. சவுதி கடைசி டெஸ்ட்.. மீண்டது நியூசி.. இங்கிலாந்து அணி சிறப்பான பவுலிங்

0
353
New Zealand vs England Test

நியூசிலாந்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நெருக்கடியான நிலையில் இருந்து மிட்சல் சான்ட்னர் அதிரடி பேட்டிங்கால் மீண்டு வந்திருக்கிறது.

தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்தில் முகாமிட்டிருக்கிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று இங்கிலாந்து ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

- Advertisement -

பரிதாபமாக அவுட் ஆன வில்லியம்சன்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவது என அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் டாம் லாதம் 135 பந்தில் 63 ரன்கள், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 92 பந்தில் 42 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் ஸ்டெம்பில் பட சென்ற பந்தை தடுக்க முடியாமல் ஏமாந்து 87 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 18 ரன், டேரில் மிட்சல் 14 ரன், டாம் ப்ளூன்டல் 21 ரன், கிளன் பிலிப்ஸ் 5 ரன் என முக்கிய விக்கெட்டுகள் அனைவரும் வெளியேறினார்கள்.

- Advertisement -

அதிரடியாக மீட்ட சான்ட்னர்

இந்த நிலையில் நியூசிலாந்து 212 ரன்கள் எடுத்து முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களத்திற்குள் வந்த சான்ட்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இவருக்கு ஒருமுனையில் நல்ல ஒத்துழைப்பு தந்த, கடைசி டெஸ்டில் விளையாடும் டிம் சவுதி அதிரடியாக 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்கபும்ரா டெஸ்டில் ஓய்வு பெற வேண்டும்.. நானாக இருந்தால் அதை செய்வேன்.. காரணம் இதான் – சோயப் அக்தர் பேட்டி

இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய சான்ட்னர் 54 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 50 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து பந்துவீச்சில் மேத்யூ பாட்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -