3 வருடம்.. கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை.. வாஷிங்டன் சுந்தர் புனே மேஜிக்.. நியூசி அணியை முடித்து வைத்தார்

0
396
Sundar

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அசத்தலான பவுலின் செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தத் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் கம்பீர் செய்த அதிரடி

இந்த போட்டியில் குல்தீப் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வரவழைக்கப்பட்டு உடனடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தலான பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தேவையான டெவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்தரா 65 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால் உள்ளே புகுந்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்தை இந்திய அணிகளின் பக்கம் கொண்டு வந்து விட்டார்.

- Advertisement -

மூன்று வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை

மூன்று வருடத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற வாஷிங்டன் சுந்தர் இன்று நியூசிலாந்துக்கு எதிராக ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், டாம் புளூன்ட்டல், கிளன் பிலிப்ஸ், டிம் சவுதி, அஜாஸ் படேல் மற்றும் மிட்சல் சான்ட்னர் என 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட்.. கம்மின்ஸ் நீங்க நினைக்கிற மாதிரி டீம் செலக்ட் பண்ண முடியாது.. இதை செய்யுங்க – மைக்கேல் கிளார்க் அறிவுரை

வாஷிங்டன் சுந்தருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முதல் ஐந்தாவது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று வருடத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பிய வாஷிங்டன் சுந்தர் சாதித்திருக்கிறார். இவருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இறுதியாக நியூசிலாந்து அணி 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

- Advertisement -