இது அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது இன்னும் முடிவாகாத ஒன்றாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கம்மின்ஸ் எடுத்த தவறான முடிவு
டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய தொடக்க ஆட்டக்காரர்களை கொண்டு வராமல் ஸ்மித்தை தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் கம்மின்ஸ் மேலே அனுப்பினார். ஆனால் அவர் எட்டு இன்னிங்ஸ்களில் பெரும் 117 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.
எனவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு புதிய தொடக்க ஆட்டக்காரர்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் கம்மின்ஸ் இருக்கிறார். தற்போது இதற்கு என்ன மாதிரியான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.
இவர் வேண்டாம் இவரை தேர்வு செய்யுங்கள்
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது ” டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை ஓபனராக அனுப்பி நாங்கள் தவறு செய்திருக்கிறோம். மீண்டும் அந்த தவறை இந்திய டெஸ்ட் தொடரில் செய்ய வேண்டாம். ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஓபனரை கொண்டு வருவோம்.யார் சிறப்பாக விளையாடி இருக்கிறார்களோ அவரை தேர்வு செய்ய முடியுமா? அப்படி என்றால் ஜோஸ் இங்லீஷை கொண்டு வர முடியுமா?”
இதையும் படிங்க : ரோகித் பண்றது ஆச்சரியமா இருக்கு.. இந்த ரெண்டு விஷயம் நடக்கலனா எல்லாமே தப்பாயிடும் – கும்ப்ளே கருத்து
“ஜோஸ் இங்லீஷ் உள்நாட்டு தொடரில் நிறைய ரன்கள் அடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவர் மிடில் ஆர்டரில் ரன்கள் எடுத்தார். எனவே ரன்கள் எடுக்கிறார்கள் என்பதை வைத்து ஆஸ்திரேலியா அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் பழக்கம் கிடையாது. குறிப்பிட்ட இடத்திற்கானவர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் இரண்டு வருடங்களாக ரன் அடித்திருக்கும் பான்கிராப்ட்டை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்