இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் காட்டிய ஒரு குறிப்பிட்ட புத்திசாலித்தனத்தை காட்டவில்லை என அனில் கும்ப்ளே விமர்சனம் செய்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய மண்ணில் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகக் குறைந்த ஸ்கோர் ஆக பதிவாகி இருக்கிறது.
இந்திய தரப்பில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்.
மழையின் காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த ஆடுகளத்தில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இயல்பாக வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். இப்படி இருந்த பொழுதும் கூட இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மேலும் இந்த போட்டியில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கிறது என்று தெரிந்தும் இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கமான முறையில் அடித்து விளையாடவே சென்றார்கள். கண்டிஷனுக்கு மரியாதை கொடுத்து விளையாடாத காரணத்தினால் மோசமான ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இருநாட்டு பேட்ஸ்மேன்களுக்குமான வித்தியாசம்
இது குறித்து அனில் கும்ப்ளே கூறும்பொழுது “நீங்கள் 46 ரன்களில் ஆல் அவுட் ஆகும்போது உங்கள் பந்துவீச்சாளர்கள் நேராக விக்கெட்டை தேடி வந்து வீசுவார்கள். இதை சரியாக உணர்ந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவருமே பந்து வருவதற்காக காத்திருந்து பொறுமையாக விளையாடினார்கள். இதை இருவரும் மீண்டும் மீண்டும் செய்தார்கள். ஆனால் இந்தியா பேட்ஸ்மேன்கள் பந்தை முன் காலில் சென்று விளையாடுவதை நோக்கமாகக் கொண்டு இருந்தார்கள். இதுதான் பெரிய வித்தியாசத்தை உண்டாக்கியது”
இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட் வருது.. ஸ்மித்தை வெச்சு இந்த ரிஸ்க் செய்ய அவருக்கு துளியும் விருப்பமில்லை – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
“இந்தியா பேட்டிங் செய்யும்பொழுது இருந்தது போல் ஆடுகளம் இல்லாமல் கொஞ்சம் மாறி இருந்தது. இருந்தபோதிலும் கூட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பந்துக்காக காத்திருந்து பொறுமையாக விளையாடும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நம்முடைய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்காக சென்று பந்து வீச வேண்டியதாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






