இப்ப பும்ராவ விட பெஸ்ட் யாரும் கிடையாது.. அதுக்கு வித்தியாசமான ஸ்பெஷல் காரணம் இதுதான் – டிம் சவுதி பாராட்டு

0
209
Bumrah

நியூசிலாந்து அணி அடுத்து ஆசிய கண்டத்தில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் சவுதி தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா மட்டுமே இருக்கிறார் என்று கூறுகிறார்.

இந்திய அணி உடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி என அடுத்து நியூசிலாந்து அணி மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகளை ஆசிய கண்டத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

கைமாறிய கேப்டன்ஷிப்

நியூசிலாந்து அணிக்கு மூன்று வடிவத்திலும் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். அதற்குப் பிறகு அனுபவ வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளை ஆசிய கண்டத்தில் விளையாட இருக்கும் நிலையில் அது குறித்து தனது கருத்தையும், மேலும் காயத்திற்கு பிறகு திரும்பி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக திரும்பி வந்திருக்கும் பும்ராவை பற்றியும் பேசி இருக்கிறார். அவர் இடைப்பட்ட காலத்தில் எதனால் மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா ஸ்பெஷல் ஆனதற்கான காரணம்

இது குறித்து டிம் சவுதி கூறும் பொழுது “பும்ரா காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு முன்பு இருந்ததைவிட மிகச் சிறப்பாக இருக்கிறார். பலவடிவங்களில் சிறப்பாக செயல்படுவது கடினமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதையும் அவரால் மிக எளிதாகச் செய்ய முடிகிறது. அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் ஆட்டத்தை இன்னும் நன்றாக புரிந்து கொள்கிறார். அவர் காயமடைந்த காலத்தில் ஓய்வில் இருந்து நல்ல முறையில் புத்துணர்ச்சி பெற்று வந்தது அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

இதையும் படிங்க : இந்திய முன்னாள் பயிற்சியாளரை தூக்கிய ஆப்கானிஸ்தான் அணி.. நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா சீரிஸ்க்கு மாஸ்டர் பிளான்

நாம் தற்போது மூன்று வடிவங்களிலும் பும்ராவின் சிறப்பான பாமை பார்க்கிறோம். அவர் தற்போது எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்.மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தற்போது அவரை விட சிறந்தவர் யாரும் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -