இந்திய முன்னாள் பயிற்சியாளரை தூக்கிய ஆப்கானிஸ்தான் அணி.. நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா சீரிஸ்க்கு மாஸ்டர் பிளான்

0
100
Afghanistan

ஆசிய கண்டத்தில் புதிய கிரிக்கெட் அணியாக உருவாகி ஆப்கானிஸ்தான் அணிக்கு குறுகிய காலத்தில் மிக எழுச்சிமிக்க செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஒருவரை தங்களுடைய பயிற்சியாளர் குழுவில் இணைத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தொடர்களுக்கும் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எழுச்சி

ஆப்கானிஸ்தான் அணி கடந்த இரண்டு வருடங்களாக மிகச் சிறப்பான செயல்பாட்டை கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி வருகிறது. இரண்டு உலக கோப்பையை வென்ற இலங்கை வீரர்களை விட அதிக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதே சிறந்த உதாரணம்.

மேலும் கடந்த ஆண்டு 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் என உலகக் கோப்பைகளை வென்ற பெரிய அணிகளை ஆப்கானிஸ்தான் அணி அனாயசமாக தோற்கடித்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது. மேலும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இந்திய முன்னாள் பயிற்சியாளர்

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்திய கிரிக்கெட் அணிக்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஆர்.ஸ்ரீதரை ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கு தங்களுடைய பயிற்சியாளர் குழுவில் இணைத்துக் கொண்டிருக்கிறது.

இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையில் ஹைதராபாத் மாநில அணிக்காக விளையாடினார். பிறகு ஹைதராபாத் அண்டர் 19 மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி, ரவி சாஸ்திரி காலத்தில் 2014 ஆம் ஆண்டு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக வந்தார். பிறகு ராகுல் டிராவிட் காலத்தில் இவருடைய இடத்திற்கு டி.திலீப் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு அவர் திரும்பி வந்தால் மட்டுமே.. ஆஸியில் ரோகித் படை கப் அடிக்கும் – மேத்யூ ஹைடன் அறிவுரை

உள்நாட்டு கிரிக்கெட்டில் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக நீண்ட அனுபவம் கொண்ட இவர் முறையாக பயிற்ச்சியாளர் பொறுப்புக்கு படித்து தயாரானவர். தற்போது இவரை அணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வந்துவிட்டது பீல்டிங் பேட்டிங் என எல்லாவற்றிலுமே இவருடைய அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் எப்படியும் அவர்களை ஆப்கானிஸ்தான் ஆச்சரியப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்

- Advertisement -