இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் 19 வயதான ஒரு இளம் வீரரை துவக்க இடத்திற்கு கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரெட் லீ கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் மோதிக்கொள்ள இருக்கின்றன. மேலும் 30 வருடங்களுக்குப் பிறகு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இந்த தொடர் மாற்றப்பட்டு இருக்கிறது. எனவே எதிர்பார்ப்புகள் பல வகைகளிலும் அதிகரித்திருக்கிறது.
கேப்டன் கம்மின்ஸ்க்கு ஏற்பட்ட தலைவலி
தற்போது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் ஓய்வுக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் துவக்க வீரர் இடத்தில் விளையாடுகிறார்கள். ஆனால் அவரோ எட்டு இன்னிங்ஸ்களில் மொத்தம் 117 ரன்கள் மட்டுமே துவக்க இடத்தில் எடுத்திருக்கிறார். மேலும் அவர் துவக்க இடத்தில் விளையாடுவதை சக அணி வீரர்களும் விரும்பவில்லை.
இப்போது அந்த இடத்திற்கு புதிய ஒரு வீரரை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா உள்நாட்டு டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கும் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் பெயர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கம்மின்ஸ் இவரே உங்களது ஆயுதம்
இது குறித்து பிரெட் லீ கூறும் பொழுது “சாம் கான்ஸ்டாஸ் நீல நிற தொப்பி அணிந்திருக்கின்ற காரணத்தினாலும் நான் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வீரர் என்பதாலும் அவரை ஆதரிக்கவில்லை. நான் அவரை ஆதரிப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஒரு நல்ல துவக்கத்தை பெற்று இருக்கிறார் என்பதால்தான்”
“அவர் அடுத்தடுத்த இரண்டு சதங்களை உள்நாட்டு டெஸ்ட் தொடரில் அடித்திருக்கிறார். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அவர் மீது கவனத்தை வைத்து வருகிறேன். அவர் 19க்கு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் இருந்து வந்து இதை செய்திருக்கிறார். தற்போது இந்த இடத்திலிருந்து ஒரு வீரரை ஆஸ்திரேலியா அணிக்குள் கொண்டு வருவது நல்லது”
இதையும் படிங்க : நியூசி 2வது டெஸ்ட்.. கில் ரிஷப் பண்ட் ஆகாஷ் தீப் விளையாடுவார்களா?.. இந்திய துணை கோச் பதில்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
“மேலும் அவர் ஷேன் வாட்சன் உடன் இணைந்து நிறைய வேலைகள் செய்து வருகிறார். நானும் வாட்சனும் நல்ல நண்பர்கள். அவர் இந்த இளம் வீரரை கொஞ்சம் கூர்ந்து கவனிக்கிறார். மேலும் அவர் விளையாடும் அணியை சுற்றி உள்ள பல வீரர்களும் அவருக்கு நல்ல முறையில் உதவுகிறார்கள். இந்தப் பையன் நல்ல திறமைசாலி மேலும் சிறந்த ஆயுதமாக இருப்பான்” என்று கூறி இருக்கிறார்.