ரோகித் விராட் இரட்டை சதம் அடிக்க வேண்டும்.. டேரில் மிச்சல் வைத்த புது செக்.. ஸ்பெஷல் சாதனையுடன் ரன் குவிப்பு

0
141
Virat

இன்று இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய நியூசிலாந்தின் டேரில் மிட்சல் பிரமாண்டமான சாதனை படைத்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். ஆனால் இதற்கு அடுத்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

டேரில் மிட்சல் அபாரம்

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு அரை சதம் மற்றும் சதம் அடித்திருந்த டேரில் மிட்சல் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 131 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்தார்.

இவருடன் இணைந்து விளையாடிய கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 88 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 186 பந்தில் 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. அர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

டேரில் மிட்சல் சாதனை

இந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்ததன் மூலமாக டேரில் மிட்சல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக குறைந்தது 500 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அதிக சராசரி வைத்திருப்பதில் முதல் இடத்தை பிடித்தார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 74 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : நியூசி டி20 தொடர்.. அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. 2 இரண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு – காரணம் என்ன?

தற்போது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா அல்லது விராட் கோலி முதல் இடத்தை தொட வேண்டும் என்றால் இந்த போட்டியில் இரட்டை சதத்தை அடிக்க வேண்டும். இல்லையென்றால் டேரில் மிச்சல் முதல் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் வரையில் சர்வதேச ஒருநாள் போட்டிகள் இல்லை என்பதால் அவரே தொடர்ந்து முதலிடத்தில் இருப்பார்.

- Advertisement -