நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா பற்றி பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணி எதிர்பார்க்காத அளவுக்கு மிக வலிமையான முன்னிலையில் இருக்கிறது. ரச்சின் ரவீந்திரவுடன் இணைந்து டிம் சவுதி நூறு பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வருவதற்கு முன்பாக நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் சவுதி விலகிக் கொண்டார். சமீப ஆண்டில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளராக சிறந்த வெற்றி கிடைக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து டிம் சவுதி தலைமையில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி குறித்து டிம் சவுதி பேசும் பொழுது “விராட் கோலி அற்புதமான ஒரு வீரர். அவர் செய்திருக்கும் சாதனைகள் அவர் யார் என்று கூறுகிறது. மேலும் அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். நீங்கள் இப்படிப்பட்ட திறமையான ஒருவருக்கு எதிராகத்தான் போட்டியிட விரும்புவீர்கள். ஆனால் இது போன்ற வீரர்களுக்கு எதிராக எப்பொழுதும் போட்டியிடுவது சவாலானது”
“விராட் கோலி விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவர் விளையாடும் விதத்தின் காரணமாக அவரை பலரும் மதிக்கிறார்கள். அவர் விளையாட்டில் உயர்ந்த தரத்தை அமைக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் என்றில்லாமல் மூன்று வடிவங்களிலும் அவர் இப்படியான உயர்தரத்தையே உருவாக்குகிறார்”
இதையும் படிங்க: 12 வருடம் கழித்து.. சொந்த ஊரில் ரச்சின் ரவீந்தரா சாதனை.. சேவாக்கை தாண்டி டிம் சவுதி அதிரடி ரெக்கார்டு
“அதே சமயத்தில் ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான் அவரது தலைமையில் விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தை மிகவும் நன்றாக ரீட் செய்யக்கூடியவர். பொதுவாக அணிக்குள் அவர் மீது எல்லோருக்கும் நல்ல மரியாதை இருக்கும். அவரை எல்லோரும் மதிக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.