இந்திய கிரிக்கெட்

ஸ்பின் பிட்ச் தரட்டும்.. நாங்க இத மட்டும் பண்ண இந்திய அணிக்கு மீண்டும் பிரச்சனைதான் – நியூஸி ரச்சின் பேட்டி

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி வீரரும் இந்திய வம்சாவளி வீரருமான ரச்சின் ரவீந்திரா இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி

2012 மற்றும் 13ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்தியாவில் இழந்ததில்லை என்ற வரலாற்றை தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இந்திய அணி நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வெற்றியை கருத்தில் கொண்டு இந்திய நிர்வாகம் இந்த முடிவை மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எங்களால் கட்டுப்படுத்த முடியாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது ஒரு சுழற்பந்து வீச்சு அதிதீவர ஆடுகளமாக இருந்தால் போட்டி மேலும் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தான் கூற வேண்டும். ஒருவேளை இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் இது போட்டியில் முன்னிலை பெறுவதற்கு பெரிய உதவியாக இருக்கும். ஒரு குழுவாக நமக்கு முன்னால் இருப்பதை ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது.

இதையும் படிங்க: எனக்கு இப்போ.. பாக் அணியில் இதுலலாம் அதிகாரம் இல்ல.. என் வேலை இதுதான் – கோச் கில்லெஸ்பி ஓபன் பேட்டி

அதை எங்களால் மாற்றுவதற்கு முடியாது. அவர்கள் எந்த விக்கட்டை அமைப்பார்கள் என்பது குறித்தும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நமது நிலைத்தன்மை, ஆட்டத்தினை அணுகும் விதம், பேட்டிங் அல்லது வந்து வீச்சின் நிலை தன்மையை கட்டுப்படுத்த முடியும்” என்று கூறி இருக்கிறார். எனவே அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்குமா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்

- Advertisement -
Published by