டி20 உலகக் கோப்பையில் ஆடப் போகும் வீரர்களை முதல் ஆளாக வெளியிட்ட நியூசிலாந்து அணி – சீனியர் வீரர் இல்லை

0
1042
New Zealand Cricket

டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னமும் இரண்டு மாதங்கள் இருந்தாலும் முதல் ஆளாக அந்தத் தொடரில் ஆடப்போகும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து அணி. ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் நடக்கும் இந்தத் தொடரில் ஆடப் போகும் 16 வீரர்களின் பெயரை நியூசிலாந்து நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அணியின் கேப்டனாக வில்லியம்சனும் துணைக் கேப்டனாக டிம் சவுதியும் செயல்படுவர் என்று அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல், இந்த உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள 16 வீரர்கள் யாரும் உலகக்கோப்பைக்கு முன் வரும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் நியூசிலாந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணி அடுத்த நான்கு மாதம் முழுவதும் வெளிநாட்டு தொடர்களிலேயே ஆட இருப்பதால் இப்படி வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவதாக கூறியுள்ளது நியூசிலாந்து நிர்வாகம்.

- Advertisement -

வங்கதேச தொடர் செப்டம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் தொடர் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது. இந்த இரண்டு தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் யாரும் ஆட மாட்டார்கள் என்றும் அணி நிர்வாகம் கூறியுள்ளது. மொத்தம் 32 வீரர்கள் நியூசிலாந்து சார்பாக வரும் தொடர்களில் பங்கேற்க உள்ளனர்.

Ross Taylor ODI

அணியின் சீனியர் வீரரான ராஸ் டெய்லர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம். உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள நீசம், போல்ட், வில்லியம்சன், ஃ பெர்குசன் ஆகியோர் உலகக்கோப்பைக்கு தங்களை தயார் செய்யும் விதமாக IPL தொடரில் ஆடுவர் என்றும் கூறியுள்ளனர்.

மற்றொரு முக்கிய வீரரான காலின் டி க்ராந்தோமே உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. மாறாக வங்கதேச மற்றும் பாகிஸ்தான் தொடரில் ஆடுவார் என்று கூறியுள்ளனர். கப்தில், சேப்மன், டேரில் மிட்சல், சோதி, ஆஸ்டில் என ஐந்து வீரர்கள் மட்டும் உலகக்கோப்பை அணியில் இருந்தாலும் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பர் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

நியூசிலாந்து டி20 உலகக்கோப்பைக்கான 16 பேர் கொண்ட அணி – வில்லியம்சன், ஆஸ்டில், சேப்மன், போல்ட், கான்வே, ஃ பெர்குசன், கப்தில், ஜெமிசன், மிட்சல், பிலிப்ஸ், நீசம், சேன்ட்னர், சீஃபர்ட், சோதி, சவுதி, மில்னே.