பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை காட்டிலும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்ததை அடுத்து தற்போது வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி சென்று கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி அபார பேட்டிங்
பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த நிலையில் அதற்கு பிறகு பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தற்போது ஆறு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்து போராடி வருகிறது.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியை விரைவாக வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றத்திற்கு காரணம் மனச்சோர்வு எனவும் நம்ப முடியாத வகையில் இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை பாராட்டியும் இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் தடுமாற்றத்திற்கு காரணம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த காரணத்தால் தான் டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே நம்ப முடியாத வகையில் இருக்கிறது அது எப்போதும் ஐந்து நாட்கள் சோதிக்கக் கூடிய வகையில் உள்ளது. நீங்கள் இதனை விட்டுச் செல்லவோ அல்லது வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது. அது தான் தற்போது பாகிஸ்தான் அணிக்கு நிகழ்ந்துள்ளது. அதாவது 150 ஓவர்களுக்கு மேல் பீல்டிங் செய்து 800 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட மனச்சோர்வே தடுமாற்றத்திற்கு காரணம்.
இதையும் படிங்க:கம்பீர் பிளான் பக்காவா இருக்கு.. 3 வருஷத்துக்கு அப்ரோ இவரு டீம்ல விளையாடுறது இதுக்காகத்தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து
நீங்கள் ஒன்றை பெறும்போது அது இரண்டாக தேடிவரும்.பின்னர் அந்த இலக்கை அடைய செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட மனச்சோர்வு மற்றும் வடுவே இந்த தடுமாற்றத்திற்கு காரணம்” என்று நாசர் ஹுசைன் கூறி இருக்கிறார். இன்னும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியும் முடிந்த அளவு டிரா செய்யவே போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.