ஆப்கான்கிட்ட எங்க தோல்விக்கு.. ஐசிசி இதை செய்யாததே காரணம்.. கஷ்டமா இருக்கு – கேன் வில்லியம்சன் பேச்சு

0
3504
Williamson

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 75 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. தோல்விக்குப்பின் தோல்விக்கான காரணங்கள் குறித்து நியூசிலாந்து கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 80 ரன்கள் அதிரடியாக குவித்தார். மேலும் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 41 ரன்கள் எடுத்தார். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல அடித்தளம் கிடைத்தது. அந்த அணி 159 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடி ஆப்கானிஸ்தான அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 75 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான அணியின் வேகப்பந்துவீச்சாளர் பரூக்கி மற்றும் சுழல் பந்துவீச்சாளர் கேப்டன் ரஷித் கான் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தத் தோல்விக்கு பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் “முதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள். அவர்கள் எல்லா வகையிலும் எங்களை விஞ்சினார்கள். இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோரை பெறுவதற்கு விக்கெட்டை கையில் வைத்து சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் இந்த தோல்வியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு சீக்கிரத்தில் தயாராக வேண்டும்.

இந்தப் போட்டிக்காக எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்து தயாரானார்கள். ஆனால் எங்களுக்கு இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஐசிசி பயிற்சி போட்டிகள் எதையும் கொடுக்கவில்லை. எனவே எங்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது. மேலும் நாங்கள் இந்த இலக்கைத் துரத்தும் பொழுது எங்களுக்கு நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு அப்படி அமையவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசி 75 ரன் ஆல்அவுட்.. நாங்க இத செஞ்சா.. எங்களை யாராலும் ஜெயிக்க முடியாது – ரஷித் கான் பேட்டி

மேலும் பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களில் நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம். நாங்கள் இதைவிட சிறந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் இதை விட்டு விலகிச் சென்று அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். அதே சமயத்தில் நல்ல ஸ்கோர் கிடைத்ததும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதைப் பயன்படுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.