நியூசிலாந்து வெளியேற்றம்? வெறுப்பா இருக்கு.. எந்த சாக்குப் போக்கும் சொல்ல விரும்பல – கேன் வில்லியம்சன் பேச்சு

0
616
Williamson

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தத் தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விரிவாக பேசியிருக்கிறார்.

இன்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அந்த அணி முதல் 30 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆறாவது விக்கெட்டையும் 56 ரன்னில் இழந்துவிட்டது. இந்த நிலையில் ரூதர்போர்டு தனியாக நின்று அந்த அணியை காப்பாற்றினார். மேலும் 18 ஓவரில் 112 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் அங்கிருந்து ரூதர்போடு வெஸ்ட் இண்டீஸ் அணியை 149 ரண்களுக்கு கொண்டு வந்தார். இன்றைய போட்டியில் தனி ஆளாக போராடிய அவர் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிலிப்ஸ் மட்டுமே 33 பந்தில் 40 ரன்கள் எடுக்க, நியூசிலாந்தின் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் மட்டும் எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் 100 மோசமாக இருப்பதால் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற நியூசிலாந்து வெளியேற இருக்கிறது.

இது குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேசும்பொழுது “நாங்கள் பந்துவீச்சில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தாக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அது வேலையும் செய்தது. ஆனால் ரூதர்போர்டுதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார். அவரது பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. ஆனால் எங்களுக்கு வெறுப்பை உண்டாக்கி விட்டது.

- Advertisement -

அவர்கள் தரப்பில் பேட்டிங் நீளம் அதிகமாக இருந்தது அவர்களுக்கு உதவி செய்தது. இந்த போட்டியில் நாங்கள் விக்கெட் எடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டோம். டி20 கிரிக்கெட் வடிவம் வித்தியாசமானது துரதிஷ்டவசமாக இன்று எங்கள் வழியில் செல்லவில்லை. முதல் 12 ஓவர்களில் எல்லாம் சிறப்பாக இருந்தது. பின்னர் ஆட்டம் அவர்கள் பக்கம் சென்று விட்டது.

இதையும் படிங்க : பெனால்டியா 5 ரன் போயிடுச்சு.. புதிய விதி ஞாபகத்துல இல்ல.. யார் மேல் தவறு? – அமெரிக்கா பயிற்சியாளர் பேட்டி

இங்குள்ள கண்டிஷன் என்னவென்று தெரியும் என்பதால் நான் தோல்விக்கு எந்த சாக்குப் போக்கையும் சொல்ல விரும்பவில்லை. 10, 15 ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே இதில் நாங்கள் மேம்படுத்த வேண்டும். நாங்கள் விரைவாக இரண்டு நாட்களில் திரும்பி வந்து புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -