இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா மைதானத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக அனுபவம் இல்லாத பப்புவா நியூ கினியா அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் டி20 உலக கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
சி பிரிவில் உள்ள இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான அடுத்த சுற்றில் இருந்து வெளியேறி விட்டன. இந்த நிலையில் சம்பிரதாயமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த பப்புவா நியூ கினியா 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 78 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு சார்லஸ் அமினி 25 பந்தில் 17 ரன்கள், சேசி பாவ் 27 பந்தில் 12 ரன்கள், நார்மன் வானுவா 13 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்கள்
நியூசிலாந்து பந்துவீச்சில் அபாரமாக பந்து வீசிய லாக்கி பெர்குசன் நான்கு ஓவர்கள் பந்து வீசி நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி பிரமிக்க வைத்தார். மூன்று விக்கட்டுகளையும் கைப்பற்றினார்
இதன் மூலம் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு ஓவர்கள் முழுமையாக பந்து வீசி ரண்களே கொடுக்காத பந்து வீச்சாளர் என்கின்ற உலக சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு உகாண்டா வீரர் இந்த டி20 உலகக் கோப்பையில் நான்கு ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே கூட ரன் அடிச்சுட்டு கோலி கூட கம்பேரிசன்.. வேற ஒரு வெட்கக்கேடான விஷயம் இருக்கு – டேனிஷ் கனேரியா விமர்சனம்
மேலும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 24 டாட் பந்துகள் வீசிய இரண்டாவது வீரர் என்கின்ற சாதனையையும் லாக்கி பெர்குசன் இதன் மூலம் படைத்திருக்கிறார். டி20 உலக கோப்பை தொடரின் முதல் சுற்று உடன் வெளியேறும் நியூசிலாந்து அணி சிறந்த ஒரு உலக சாதனை உடன் வெளியேறுகிறது.