உலக கிரிக்கெட்

158 ரன்.. மகளிர் டி20 உலக கோப்பை பைனல்.. நியூசிலாந்து சாம்பியன்.. தென் ஆப்பிரிக்கா தொடர் சோகம்

நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக நியூசிலாந்து பெண்கள் அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டிஸ் அணியை வென்றும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை வென்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தன.

இறுதிப்போட்டியில் காப்பாற்றிய அமலியா கெர்

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி நம்பிக்கை நட்சத்திரம் துவக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 31 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிம்மர் 7 பந்தில் 9 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் வந்த அமலியா
கெர் 38 பந்தில் 4 பவுண்டரிகள் உடன் 43 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து புரூகி ஹல்லிடே 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ம்லபா நான்கு ஓர்களுக்கு 31 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைபற்றினார்.

- Advertisement -

சிறப்பாக ஆரம்பித்து சரிந்த தென் ஆப்பிரிக்கா

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. இதற்குப் பிறகு பிரீட்ஸ் 18 பந்தில் 17 ரன்கள், கேப்டன் வோல்வார்ட் 27 பந்தில் 33 ரன்கள், பாஸ்க் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக செலோன் ட்ரியான் 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மகளிர் டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. ரோஸ்மேரி மற்றும் அமலியா கெர் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : 164 ரன்கள்.. ஆப்கானை வெல்ல வைத்த தனி ஒரு வீரர்.. பங்களாதேஷ் அணி தோல்வி.. எமர்ஜிங் ஆசியா கப்

மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு சர்வதேச உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து சோகம் தீரவில்லை. இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா ஆண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய ஆண்கள் அணியிடம் தோல்வி அடைந்தது. தற்போது நியூசிலாந்திடம் பெண்கள் தென்னாபிரிக்க அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது

- Advertisement -
Published by