இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை பார்த்து பயப்படறாங்க.. ஆனா நியூசி பிளான் இதுதான்.. நேத்தே காட்டினாங்க – பசித் அலி கருத்து

இந்திய அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்படுவதாகவும், இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி ஏற்கனவே குறிப்பிட்ட திட்டத்தை தீட்டி வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று இருக்கின்றன. இந்த போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்திய அணிக்கு பாதகமான வரலாறு

2000ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைய நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கடுத்து 2011ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட பொழுதும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றது.

இரண்டு முறை இந்திய அணி ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்திருக்கிறது. தற்பொழுது இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருந்தது. சமீபத்திலும் வரலாற்று ரீதியாகவும் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தடுமாறி இருக்கிறது. இது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுப்பதாக இருக்கிறது. ஆனாலும் தற்போது துபாய் கண்டிஷனில் சுழல் பந்துவீச்சில் நியூசிலாந்து அணிக்கு லீக் சுற்றில் பெரிய அச்சுறுத்தலை கொடுத்திருந்தது.

- Advertisement -

இந்திய அணியை பார்த்து பயப்படுகிறார்கள்

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “இந்திய அணி தான் விளையாடும் விதத்தில் எல்லா அணிகளுக்கும் பெரிய பயத்தை விதைத்திருக்கிறது. செமி பைனல் அல்லது பைனல் எந்த போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்கா யார் மோத இருந்தாலும் அவர்கள் பயப்படுகிறார்கள். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி, இந்திய அணிக்கு எதிராக விளையாட நியூசிலாந்து தயாராகி இருக்கிறது”

இதையும் படிங்க : ரோகித் கம்பீர் சொல்ற மாதிரி இல்ல.. நாங்க ஒரே இடத்தில ஆடறது நன்மைதான் – முகமது ஷமி பேச்சு

” தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான செமி பைனலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செட் செய்து போட்டியை வென்றார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தரமான சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஜடேஜா மற்றும் அக்சர் இருவரும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக விளையாட அவர்களுக்கு குழப்பமாக இருக்கும். குல்தீப் கொஞ்சம் வேகமாக வீச வேண்டும். இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சமாகவே இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts