ரோகித் கம்பீர் சொல்ற மாதிரி இல்ல.. நாங்க ஒரே இடத்தில ஆடறது நன்மைதான் – முகமது ஷமி பேச்சு

0
35
Shami

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு நன்மைகள் இருக்கிறது என முகமது ஷமி கூறியுள்ள கருத்து தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாத காரணத்தினால் தன்னுடைய அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் வைத்து விளையாடுகிறது. அருகில் அபுதாபி சார்ஜா என கிரிக்கெட் மைதானங்கள் இருந்த பொழுதிலும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது பல அணிகளிடமிருந்து எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

கம்பீர் மற்றும் ரோகித் சர்மா கருத்து

இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் நன்மை கிடைக்கிறது என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இது குறித்து கம்பீர் பேசி இருந்த பொழுது தங்களுக்கு இதனால் எந்த விதமான நன்மையும் இல்லை எனவும், தாங்கள் பயிற்சி கூட துபாய் மைதானத்தில் செய்வதில்லை எனவும், இப்படி எல்லாம் விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தொட்டில் குழந்தைகள் அவர்கள் வளர வேண்டும் எனவும் கடுமையாக கூறியிருந்தார்.

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது மூன்று போட்டிகள் விளையாடிய முடிவில் மூன்று போட்டிகளுக்கும் தரப்பட்ட ஆடுகளங்கள் வித்தியாசமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ஒரே மைதானத்தில் விளையாடுகின்ற எந்த நன்மையும் இந்திய அணிக்கு இல்லை எனவும் கூறியிருந்தார்.

- Advertisement -

முகமது ஷமி வித்தியாசமான கருத்து

ஒரே மைதானத்தில் விளையாடுவது வெளியில் இருந்து வந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளரும் கேப்டனும் பதிலடி கொடுத்திருந்த நிலையில், இதற்கு எதிர்மறாக இந்திய அணி வீரர் முகமது ஷமி பேசியிருக்கும் விஷயம் தற்பொழுது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : என்ன எல்லாரும் ஓவரா பேசுறீங்க? உங்க காலத்தில் நீங்கள் எப்படி விளையாடுனீங்க மறந்து போச்சா? பாபர் அசாம் தந்தை சாடல்

இது குறித்து முகமது ஷமி கூறும் பொழுது ” நாங்கள் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் கண்டிஷன் மற்றும் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து எங்களால் தெரிந்து கொள்ள முடியும். இது எங்களுக்கு சாதகத்தை கொடுக்க செய்கிறது. உங்களுக்கு ஆடுகளத்தின் தன்மை அது எவ்வாறு செயல்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிவது நன்மையாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -