நியூசிலாந்து நட்சத்திர சாதனை வீரர் கேன் வில்லியம்சன் திடீரென ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறார்.
நியூசிலாந்து கிரிக்கெட்டில் இதுவரை உருவாகி வந்த பேட்ஸ்மேன்களில் கேன் வில்லியம்சன் மிகச் சிறந்தவராக கருதப்படுகிறார். மேலும் தற்காலகட்டத்தில் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
இன்னும் நான்கே மாதங்கள்…
அடுத்த ஆண்டு 2026ல் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டு நாடுகளிலுமே சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்து ஆசியாவில் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு சிலரில் கேன் வில்லியம்சன் முக்கியமானவர்.
இப்படியான நிலையில் அவர் நேற்று திடீரென சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 33 ரன் ஆவரேஜில் 2575 ரன்கள் எடுத்து, அதுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சிறந்த ஆவரேஜ் வைத்திருக்கும் அவர் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு மிக முக்கியமானவராக பார்க்கப்பட்டார்.
அவசர முடிவு ஏன்?
இது குறித்து கேன் வில்லியம்சன் வெளியிட்ட அறிக்கையில் “நீண்ட காலமாக நியூசிலாந்து கிரிக்கெட்டில் ஒரு அங்கமாக இருந்து வருவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இதில் கிடைத்த நினைவுகள் மற்றும் அனுபவங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக எப்பொழுதும் இருக்கிறேன். என்னுடைய இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முக்கியமானதாகும். இது டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியை எடுத்துச் செல்வதற்கான தெளிவை கொடுக்கும்”
இதையும் படிங்க : 139 ரன்.. பாகிஸ்தானுக்கு கப் வாங்கி தந்த பாபர் அசாம்.. தென் ஆப்பிரிக்க அணி தோல்வி.. உலக கோப்பைக்கு தயார்
“இங்கே நிறைய டி20 இளம் திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை உள்ளே கொண்டு வந்து தயார்படுத்துவதற்கான சரியான காலகட்டம் இதுவாக இருக்கிறது. சான்ட்னர் நல்ல ஒரு தலைவராக உருவாகி வருகிறார். டி20 வடிவத்தில் நியூசிலாந்தை முன்னோக்கி தள்ள வேண்டிய காலகட்டம் இது. நான் தொலைதூரத்தில் இருந்தாலும் எப்பொழுதும் அவர்களுக்கு என் ஆதரவை கொடுப்பேன்” என்று கூறி இருக்கிறார்.






