நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விளையாடிய நிலையில் அதற்கு அடுத்ததாக துபாயில் இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசியில் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பிரேஸ் வெல் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்ததை அடுத்து துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. மேலும் பாகிஸ்தானில் உள்ள மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி மற்றும் துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடி வருவது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களை விமர்சனங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் இந்திய அணியும் மற்ற அணிகளைப் போலவே துபாயில் வெவ்வேறு மைதானங்களில் போட்டிகளை விளையாடி இருக்க வேண்டும் எனவும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில், ஆல் ரவுண்டர் மைக்கேல் பிராஸ்வெல் விமர்சனம் எதையும் பதிவு செய்யாமல், நியூசிலாந்து அணி புதிய மைதானத்தில் முக்கிய சூழ்நிலையில் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஆச்சரியமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கருத்து
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான். இது இப்படியே இருக்கட்டும் இதுகுறித்து எதுவும் பேசப்போவதில்லை. இது உற்சாகப்படுத்தப்படும் ஒரு பகுதி இன்று நான் நினைக்கிறேன். இந்த முறை வெவ்வேறு நிலைமைகளில் வித்தியாசமான முயற்சிகளை கண்டுபிடிக்க உதவும் என்று நினைக்கிறேன். வேறு வேறு நிலைமைகளில் விளையாடவும், கற்றுக் கொள்ளவும் நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம். ஆர்வமாகவும் இருக்கிறோம்.
இதையும் படிங்க:கிரிக்கெட் உலகில் இந்திய அணி இல்லனா.. விமர்சனம் செய்யும் உங்களுக்கே சம்பளம் இல்லை – சுனில் கவாஸ்கர் பதிலடி
இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டி நிச்சயமாக எங்களுக்கு ஒரு முக்கியமான ஆட்டமாகும். ஐசிசி தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளும்போதெல்லாம் அது எப்போதுமே எங்களுக்கு ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும். இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதற்கும் அது வழங்கும் சவால்களுக்கும் நாங்கள் எப்போதுமே உற்சாகமாக இருக்கிறோம். நிச்சயமாக நீங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தால் அரை இறுதிக்கு நிறைய உத்வேகம் தேவை என்று நினைக்கிறேன்” என்று கூறுகிறார். இந்திய அணி நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது.