தற்போது எம்சிசி, பவுண்டரி எல்லையில் பிடிக்கப்படும் கேட்சுக்கு புதிய விதியை அறிவித்திருக்கிறது. இனி பவுண்டரி எல்லையில் வீரர்கள் நினைத்தபடி தங்களுடைய திறமையை காட்டி கேட்ச் பிடிக்க முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட்டுக்கு விதிகளை வகுக்கக் கூடிய தலைமையகமாக எம்சிசி இருக்கிறது. புதிய விதிகளோ அல்லது விதிகளில் ஏதாவது திருத்தங்களோ செய்வதற்கான உரிமை எம்சிசி இடம் உள்ளது. இந்த நிலையில் தற்போது பவுண்டரி எல்லை கோட்டுக்கு அருகே பிடிக்கப்படும் கேட்ச் பற்றிய புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய விதி
கிரிக்கெட்டில் பவுண்டரி எல்லைக்கோட்டை ஒட்டிப் பிடிக்கப்படும் கேட்ச்க்கு பழைய விதியில் ஒரு ஃபீல்டர் எத்தனை முறை வேண்டுமானாலும் பவுண்டரி எல்லையை தாண்ட முடியும், ஆனால் அவர் பந்தை தொடும்பொழுது அவருடைய கால்கள் பவுண்டரி எல்லைக்கு வெளியே தரையை தொட்டிருக்கக் கூடாது என்பதுதான் விதியாக இருந்தது.
மேலும் பவுண்டரி எல்லையை தாண்டக்கூடிய ஃபீல்டர் பந்தை இன்னொரு ஃபீல்டருக்கு தூக்கி எறிந்து அவர் கேட்ச் பிடித்தாலும் அது அவுட் என கருதப்பட்டது. பந்தை தூக்கி எறியும் நேரத்தில் பௌண்டரி எல்லைக்கு வெளியே உடலில் எந்த பாகமும் தரையைத் தொட்டிருக்கக் கூடாது என்பது மட்டும் தான் கட்டுப்பாடாக இருந்தது.
புதிய விதி அறிவிப்பு
தற்போது பவுண்டரி எல்லையை ஒட்டிப் பிடிக்கப்படும் கேட்சுகளுக்கு ஃபீல்டர்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பவுண்டரி எல்லையை தாண்ட முடியும், அந்த நேரத்தில் பந்தை கோட்டுக்கு வெளியே எறிந்து, பிறகு அவர்களும் வெளியே வந்து பந்தை பிடித்து அவுட் செய்து கொள்ளலாம். முன்பு போல ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பவுண்டரி எல்லைக்கு வெளியில் சென்று பந்தை தட்டி தட்டி பிடித்துக் கொள்ள முடியாது.
இதையும் படிங்க : கம்பீர் நினைச்சது நடந்துருச்சு.. இங்கிலாந்துல அந்த பையன் மட்டும் இதை செஞ்சா நம்மள தடுக்க முடியாது – அஸ்வின் பேட்டி
மேலும் ஒரு ஃபீல்டர் பந்தை காற்றில் தடுத்து வெளியே உள்ள ஃபில்டர் இடம் எறிகிறார் என்றால், அந்தப் பந்தை வெளியே உள்ள ஃபீல்டர் பிடிக்கும் பொழுது, பந்தை எறிந்த ஃபீல்டரும் பவுண்டரி கோட்டுக்கு உள்ளே வந்து விட வேண்டும். ஒருவேளை அவர் பவுண்டரி எல்லைக்கோட்டுக்கு வெளியில் இருந்தால் அது சிக்ஸர் ஆகவே அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.






