கம்பீர் நினைச்சது நடந்துருச்சு.. இங்கிலாந்துல அந்த பையன் மட்டும் இதை செஞ்சா நம்மள தடுக்க முடியாது – அஸ்வின் பேட்டி

0
170
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த மாதம் 20ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இளம் இந்திய டெஸ்ட் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

அஸ்வின் உடைய இந்த பேட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியவரது திறமை மற்றும் பொறுப்புகள் பற்றியும், இளம் இந்திய டெஸ்ட் அணி குறித்து கம்பீர் உடைய பார்வை பற்றியும் மிகவும் விளக்கமாக பேசியிருக்கிறார். தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி புதிய உருவாக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்ய வேண்டியது

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் ஒரு உயர்தர டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று நான் நினைக்கிறேன். அவரால் அணிக்குள் ஒரு பாரம்பரிய டெஸ்ட் பேட்ஸ்மேனாக நுழைய முடியும். அதற்காக அவர் மிகவும் மெதுவாக விளையாடிக் கொண்டிருக்க தேவை கிடையாது. சில நேரங்களில் மிகவும் சந்தேகத்திற்குரிய ஷாட்டை எடுத்து விளையாடக்கூடிய அற்புதமானவர். அவர் அப்படியான முறையில் விளையாடிய அணிக்காக போட்டிகளை வென்று கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்”

“அவர் இதற்கான ஃபார்முலாவை சரியாக கண்டுபிடித்து மேலும் அதை இன்னும் சீரான முறையில் மாற்றிக் கொள்ளும் பொழுது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இப்படி நடக்கும் பொழுது அவர் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் வருவதை நான் தாமதம் என்று தான் சொல்லுவேன். மேலும் அவர் விளையாடும் பொழுது நான் டிவியுடன் ஒட்டிக் கொள்வேன்”

- Advertisement -

கில்லுக்கு இது நடக்க வேண்டும்

“திறமை மற்றும் பொறுப்பின் அடிப்படையில் கில் என்னை ஏற்கனவே கவர்ந்து விட்ட வீரர். அவர் தற்பொழுது கேப்டனாக வந்திருப்பதால் ஒரு பேட்ஸ்மேனாக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவருக்கு எடுத்ததும் நல்ல துவக்கம் கிடைத்துவிட்டால் அது அவருடைய கேப்டன் பொறுப்பில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவருக்கு ஒரு நல்ல துவக்கம் தேவையாக இருக்கிறது”

இதையும் படிங்க : ஒரே ஒரு அந்த சம்பவம்.. தென் ஆப்பிரிக்கா கதையை முடிச்சி கோப்பையை தூக்குவோம் – ஆஸி கோச் சவால் பேட்டி

“நேர்மையாக சொல்வது என்றால் கம்பீருக்கு இந்த இளம் இந்திய டெஸ்ட் அணியை மிகவும் பிடிக்கும். அவருக்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் இது மிகவும் சவுகரியமாக இருக்கும். ஏனென்றால் இந்த அணி இளமையானதாகவும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் கேள்விகளை கேட்கவும் கூடியதாகவும் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -