டி20 உலக கோப்பை பயிற்சி போட்டி.. 181 ரன்.. இலங்கை அணியை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்

0
3009
Netherlands

ஐசிசி-யின் ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று பயிற்சி போட்டிகள் உடன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் துவங்கியது. இதில் ஒரு பயிற்சி போட்டியில் வெகு சாதாரணமாக நெதர்லாந்து அணி இலங்கை அணியை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

இதில் பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிக் கொண்டிருந்த பயிற்சி போட்டியில் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் அமெரிக்கா மற்றும் நமிபியா அணிகளுக்கான பயிற்சி போட்டியில் 119 ரன்களை 10 ஓவர்களில் துரத்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

- Advertisement -

மேலும் கனடா அணி நேபாள அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் சில சிறிய நாடுகளும் தங்களுடைய பயிற்சி போட்டியில் நேற்று விளையாடியிருந்தன. இன்று முக்கியமாக ஆப்கானிஸ்தான் ஓமன் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் இரவு விளையாடுகிறது.

இந்த நிலையில் நேற்று நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து இருக்கிறது. அந்த அணியின் மைக்கேல் லெவிட் 55, தேஜா நிடமன்னரு 27 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை தரப்பில் பந்துவீச்சில் மதுசங்கா இரண்டு விக்கெட், துணித் வெல்லாலகலே ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

திருப்பி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 161 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது. அந்த அணிக்கு கேப்டன் ஹசரங்கா கடைசியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்திருக்கிறார். இதற்கு அடுத்து தனஞ்செய டி சில்வா 31 ரன்கள் எடுத்திருக்கிறார். நெதர்லாந்து பந்துவீச்சில் ஆரியன் தத் நான்கு ஓவர்களில் 20 ரன் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சந்தேகமே வேணாம்.. இந்திய அணி தான் ஜெயிக்கும் பாகிஸ்தான் போட்டியில்.. கம்ரன் அக்மல் உறுதி

இலங்கையணி சமீப காலமாக பழைய முறையில் சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறது. அதே சமயத்தில் நெதர்லாந்து ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகள் சிறப்பான முறையில் முன்னேறி வருகின்றன. மேலும் உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கை அணி தோற்று அவர்களது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது!