நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடிய திலக் வர்மா பேட்டிங் அணுகு முறையில் விராட் கோலியை பார்ப்பதாக முகமது கைப் கூறியிருக்கிறார்.
இந்த முக்கிய போட்டியில் இந்திய அணியின் முதல் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் திலக் வர்மா சிறப்பாக விளையாடி இந்திய அணியை இறுதிவரை நின்று வெற்றி பெற வைத்தார். இந்த போட்டிக்குப் அவருடைய இடம் டி20 அணியில் உறுதியாகி இருக்கிறது.
விராட் கோலியை பார்க்கிறேன்
இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது “திலக் வர்மா விராட் கோலி உடன் நிறைய விளையாடி இருக்கிறார். விராட் கோலி கிளாசிக்கல் வீரர். அவர் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அவருடைய உடல் தகுதி மிகவும் அபாரமானதாக இருக்கும்”
“இதே பாணியை நான் திலக் வர்மாவிடம் பார்க்கிறேன். அவர் நேற்று விராட் கோலி போல முக்கியமான போட்டியில் அழுத்தத்தின் கீழ் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அவர் எடுத்தவுடன் அடித்து நொறுக்காமல் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டார். அத்துடன் சரியான நேரத்தில் பேட்டிங் வேகத்தை அதிகரித்தார். இவரிடம் நான் விராட் கோலியை பார்க்கிறேன்”
முக்கிய வீரர்கள் கைவிட்டார்கள்
“இதேபோல மெல்போர்னில் டி20 உலகக்கோப்பையில் ரவுப் விராட் கோலி முக்கியமான இரண்டு சிக்ஸர்கள் அடித்திருந்தார். அதேவழியில் தான் நேற்று திலக் வர்மாவும் அவரது பந்துவீச்சில் விளையாடி இருந்தார். விராட் கோலியின் போல இவரது உடல் தகுதியும் மிகவும் அபாரமானதாக இருக்கிறது”
இதையும் படிங்க : ஷிவம் துபே அதை செய்யலனா ஜெயிச்சிருக்க வாய்ப்பில்ல.. அவரோட 2 விஷயத்தை மறக்காதிங்க – இர்பான் பதான் வேண்டுகோள்
“இறுதிப்போட்டியில் முக்கிய வீரர்கள் பிளாப் ஆகி விட்டார்கள். ஆனால் திலக் வர்மா தன்னுடைய டெக்னிக் மற்றும் திறமையில் நம்பிக்கை வைத்து விளையாடினார். கடினமான சூழ்நிலையில் அணியை வெற்றி பெற வைப்பதற்கு ஒரு சோதனையாக இது அவருக்கு அமைந்தது. இந்த சோதனையில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வென்று விட்டார்” என்று கூறியிருக்கிறார்.






