இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தமிழ்நாடு மற்றும் இந்திய அணிக்காக விளையாடும் இளம் வீரர் சாய் சுதர்சனின் பேட்டிங் திறமை குறித்து மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய் சுதர்சன் ஒரு சதத்துடன் 617 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பையை கைவசம் வைத்திருக்கிறார்.
அடுத்து இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு பயிற்சி பெறும் விதமாக இங்கிலாந்து ஏ அணியுடன் இந்திய ஏ அணி விளையாடுகிறது. இதில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் ருதுராஜ் மற்றும் மூத்த வீரர் கருண் நாயர் என பலர் இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் சாய் சுதர்சன் இந்திய ஏ அணியில் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடர் ஒரு வார காலம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், பிளே ஆப் சுற்றில் விளையாடக்கூடிய அணியாக குஜராத் இருப்பதால், தற்போது தற்காலிகமாக கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து பேசும்பொழுது “சுனில் கவாஸ்கருக்கு பிறகு பேட்டிங் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். இந்த ஐபிஎல் சீசன் முழுவதிலும் அவர் நிலையாக இருந்து வருகிறார். அவர் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்ததாக நான் நினைக்கவில்லை. அவர் தொழில்நுட்ப ரீதியாக திறமையானவர். இந்த விஷயத்தில் தற்போது அவரை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை”
இதையும் படிங்க : ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட.. ஒவ்வொரு நாளும் 150 பேர் என்கிட்ட கேக்கறாங்க – பென் கட்டிங் சுவாரசிய பேட்டி
“நீங்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அவர் உங்களை மீட்பராக இருக்க முடியும். ரோஹித் சர்மாவின் இடத்தில் வந்து இன்னிங்ஸை தொடங்கட்டும். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கடினமான வேலை. ஆனால் இங்கிலாந்து சூழ்நிலையில் இதை கையாள அவர் தயாராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.