இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி முடித்துள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
டெஸ்ட் தொடரில் புதிய கேப்டன்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்த சூழ்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று தலைமை தாங்கினார். ஆனால் அவரும் காயத்தால் பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இருப்பதால் ரோஹித் சர்மா திரும்பவும் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குவாரா? அல்லது மாற்று வீரர் தேவையா? என்பது குறித்து நவ்ஜோத்சிங் சித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இன்னும் வேறு என்ன செய்வது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த கடைசி நேரத்தில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக யாரை கேப்டனாக நியமிப்பீர்கள்? என்று சொல்லுங்கள். ரோகித் சர்மா தன்னலமில்லாமல் அணியின் நலனுக்காக விளையாடினார். வேறு யார் இங்கு வந்து 150 ரன்கள் எடுத்தார் என்று சொல்லுங்கள். ரோகித் சர்மாவுக்கு பதிலாக மாற்று வீரரை நியமிப்பதற்கு. அனுபவம் என்பது துன்பத்தின் பள்ளியில் இருந்து கற்றுக் கொள்ளப்படுகிறது. தற்போது ரோகித் சர்மாவை எப்படி மாற்றுவீர்கள். இங்கிலாந்திக் அவரது சாதனையை பாருங்கள், அங்கு அவருக்கு எத்தனை சதங்கள் இருக்கிறது என்று பாருங்கள்.
இதையும் படிங்க:அது பதட்டமா இருந்துச்சு.. ஏன்னா இது எதிர்காலத்தை எப்படி வேணாலும் மாத்தும் – ஐபிஎல் ஏலம் குறித்து கேஎல் ராகுல்
முயற்ச்சி என்பது இதில் தான் உள்ளது. பழையதை பாதுகாத்து புதியதை அறிந்து கொள்ளுங்கள். எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார். ரோஹித் சர்மா தான் கேப்டன் ஆக இருக்க வேண்டும். ரோகித் சர்மா மூங்கில் மரம் ஏற வேண்டுமா? இன்னும் அவர் வேறு என்ன செய்ய வேண்டும்? இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற ஒருவரை நீங்கள் இப்படியா சோதிப்பீர்கள்? என்று நவ்ஜோத் சிங் சிந்து கூறியிருக்கிறார்.