இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேஎல் ராகுல் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தான் ஏலத்திற்கு வந்த போது, அந்த அனுபவம் குறித்து கே.எல் ராகுல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
6 வருடத்திற்கு பின் ஏலம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேஎல் ராகுல் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட நிலையில் பிறகு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட லக்னோ அணிக்கு கடந்த இரண்டு வருடங்கள் கேப்டனாக தலைமை தாங்கினார். இந்த சூழ்நிலையில் அணியின் நிர்வாக இயக்குனரோடு கேஎல் ராகுலுக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட லக்னோ அணி பின்பு அவரை தங்கள் அணிக்கு தக்க வைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏலத்திற்கு வந்த கேஎல் ராகுல் அப்போது சற்று பதட்டமாக இருந்ததாக கூறினார். எந்த அணிக்கு செல்வேன் என்பதை தெரிந்து கொள்ள சற்று பதட்டமாக இருந்ததாகவும், சில சமயம் அது நல்லதாக இருந்தாலும் சில நேரங்களில் அது பெரிய சவால்களுக்கு வழிவகுக்கும் என்று கேஎல் ராகுல் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
பதட்டமான அனுபவமாக இருந்தது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த ஏலம் எனக்கு ஒரு பதட்டமான அனுபவமாக இருந்தது. ஒரு வீரராக நீங்கள் எந்த அணியில் சேர்வீர்கள் என்பது தெரியாமல் இருப்பது ஒரு எளிதான காரியம் கிடையாது. பல ஆண்டுகளாக ஏலம் என்பது எப்படி எதிர்பாராதவையாக இருக்கும் என்று நான் உணர்ந்திருக்கிறேன். விஷயங்கள் எப்படி உருவாகின்றன என்பது குறித்தும் நான் அறிந்திருக்கிறேன். கடந்த மூன்று சீசன்களாக நான் கேப்டனாக இருந்து ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன்.
இதையும் படிங்க:அஸ்வினை விட அவரின் விலை மிக அதிகம்.. சிஎஸ்கே இதை எப்படி சமாளிக்கும்.? – முன்னாள் சிஎஸ்கே வீரர் பேட்டி
ஒரு அணியை சேர்க்கும் போது உரிமையாளர் எதிர்கொள்ளும் அழுத்தத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒரு வீரரின் பார்வையில் இருந்து பார்க்கும்போது உங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருப்பதால் அதனைப் புரிந்து கொள்வது கடினமானது. ஏலம் என்பது ஒரு வீரரின் எதிர்காலத்தை வடிவமைக்கலாம். அல்லது சவால்களை முன் வைக்கலாம். எனவே நான் அப்போது பதட்டமாக இருந்தேன்” என்று பேசி இருக்கிறார்.