இந்திய அணியின் தொடர் தோல்வி.. எதுக்கு கவலைப்படணும்.. கொஞ்சம் திரும்பி நாம யாருன்னு பாருங்க – முன்னாள் வீரர் பேட்டி

0
485

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்திருப்பது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இது குறித்த சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தொடர்ச்சியான தோல்வி

டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி,அதற்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் வென்றது. ஆனால் அதற்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவியது.

அதற்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கு பெறும் கனவோடு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அங்கேயும் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்திய அணியின் தொடர்ச்சியான தோல்வி இந்திய வீரர்கள் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் தோல்வியின் பக்கத்தை திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும் இதற்கு முன்பு இந்திய அணி செய்துள்ள சாதனைகளை பார்க்குமாறு முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பிரகாசமான பக்கத்தை பார்ப்பது சிறந்தது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தோல்விப் பாதையை திரும்பிப் பார்க்க வேண்டாம். டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர மற்ற இரு வடிவ கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி தான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தான் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. மேலும் தற்போதைய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் 17 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டி20 தொடரில் வெற்றி சதவீதம் 82 ஆகவும் உள்ளது.

இதையும் படிங்க:WTC பைனல்.. ஆஸி அணிக்கு எதிரா.. ஆப்கான் அயர்லாந்த வச்சு.. இந்த ஸ்பெஷல் பிளான் இருக்கு – தென் ஆப்பிரிக்கா கோச் பேட்டி

அதுமட்டுமல்லாமல் அதற்கு முன்பு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அதன் சொந்த மண்ணில் குறுகிய வடிவ கிரிக்கெட் தொடரில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. எனவே தோல்வி அடைந்ததை நினைத்து கவலை கொள்ளாமல் வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தை பார்ப்பது மிகவும் சிறந்தது” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -