நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனை இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமான ஆண்டிலிருந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் ஆக சாய் சுதர்சன் இருக்கிறார். மேலும் தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் மெருகேறி வந்து, இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தன்னை தக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
அஸ்வின் தெரிவித்த பாராட்டு
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாய் சுதர்சன் பற்றி ஒரு முறை கூறும் பொழுது அவருடைய பேட்டிங்கில் நாம் பார்க்கும் ஒரு குறையை அடுத்து சில மாதங்கள் கழித்து பார்க்கும் போது இருக்காது என்றும், அந்த அளவிற்கு அவர் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கக்கூடிய சிறந்த வீரர் என்றும் பேசியிருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் விளையாடி இருக்கும் முதல் மூன்று போட்டிகளில் 74, 63, 49 ரன்கள் என சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அவருடைய பேட்டிங்கில் அதிரடி என்பதை விட புத்திசாலித்தனம்தான் அவருடைய வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்து வருகிறது.
சாய் சுதர்ஷன் இன்னொரு சுனில் கவாஸ்கர்
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்தூர் சாய் சுதர்சன் பற்றி பேசும்பொழுது அவரைப்போல ஒரு தொழில்நுட்ப ரீதியான தொடக்க ஆட்டக்காரரை தான் பார்க்கவில்லை எனவும், அவர் விளையாடுவது சுனில் கவாஸ்கரை போலவே இருப்பதாகவும் மனம் திறந்து மிகப்பெரிய அளவில் பாராட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க : திடீரென மும்பை இளம் வீரரை சோதனைக்கு அழைத்த சிஎஸ்கே.. அணியில் சேர்கிறாரா.. என்ன நடந்தது?
இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து பேசும் பொழுது “நான் சாய் சுதர்சனின் தீவிர ரசிகன். நான் பார்த்ததில் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார். அவர் பேட்டிங் செய்ய நிற்பதும், அவர் விளையாடுவதும் சுனில் கவாஸ்கரை போலவே இருக்கிறது. பந்தை உடம்புக்கு அருகில் வைத்து விளையாடுகிறார். எந்த வடிவத்திலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கலாம். நேற்று ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ஸ்டெரைட் டிரைவ் இந்த தேதி வரையில் மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறார்.






