ஒரே செக்ஷனில் 2 முறை சந்திமல் விக்கெட்.. அஸ்வினின் சாதனையையும் முறியடித்த நாதன் லயான்.. கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் மூன்று மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி ஆறு விக்கெட் இழப்பிற்கு 654 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனை அடுத்து இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் குனேமன் மற்றும் நாதன் லயானின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து தடுமாறியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு:

மூன்று விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் என்று ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. இதில் இலங்கை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப சந்திமால் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்து வந்தார்.

நிதானமாக விளையாடி வந்த சந்திமால் 139 பந்துகள் எதிர்கொண்டு 72 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். சந்திமால் ஆட்டமிழந்த போது நேரம் காலை 10:12 ஆகும். இலங்கை அணி 165 ரன்கள் ஆட்டம் இழந்ததால் பாலோ ஆன் பெற்று மீண்டும் களமிறங்கியது. அப்போது மூன்றாவது வீரராக களம் இறங்கிய சந்திமால் 31 ரன்கள் எடுத்த போது மீண்டும் லயான் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது மணி 12:01 ஆகும்.

- Advertisement -

அஸ்வின் சாதனை முறியடிப்பு:

இதன் மூலம் ஒரே செஷனில் ஒரே பவுலரிடம் இரண்டு முறை ஆட்டம் இழந்த வீரர் என்ற சோகமான சாதனையை சந்திமால் படைத்திருக்கிறார். இந்த அரிய நிகழ்வை நாதன் லயான் படைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயான் அஸ்வினின் மகத்தான சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார்.

இலங்கை மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு பந்து வீச்சாளர் என்ற பெருமையை நாதன் லயான் பெற்றிருக்கிறார். அஸ்வின் இலங்கை மண்ணில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது நாதன் லயான் 39 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சையது அஜ்மல் 38 விக்கெட்களுடனும், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் வார்னே 37 விக்கெட்டுகளுடன் உள்ளனர்.இதே போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நாதன் லைன் படைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by