இந்திய அணியில் இடமில்லை.. கம்மின்ஸ்காக எது வேணாலும் செய்யலாம்.. காரணம் இதுதான் – நடராஜன் பேட்டி

0
156
Natarajan

இன்று ஜிம்பாப்வே தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய இளம் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் டி.நடராஜன் சேர்க்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் இறுதி கட்டப்பட்டு வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்த அவருக்கு டி20 உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையில் அவர் தன்னுடைய ஐபிஎல் கேப்டன் பாட் கம்மின்ஸ் பற்றி மிகவும் உயர்வாக பேசி இருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாத முதல் வாரத்தில் ஜிம்பாப்வே சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகவதற்கான முதல் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பதிவு செய்த நடராஜனுக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு தராத பட்சத்தில், மேற்கொண்டு அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான தயாரிப்புகளில் வாய்ப்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இதிலும் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு வந்திருந்த நடராஜன் தன்னுடைய ஐபிஎல் கேப்டன் பாட் கம்மின்ஸ்காக என்ன வேண்டுமானாலும் ஏன் செய்யலாம்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து நடராஜன் கூறும் பொழுது “கேப்டன் என்றில்லாமல் கம்மின்ஸ் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்பதால் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு என்னுடைய பலம் மற்றும் பலவீனம் நன்றாகத் தெரியும். அவர் என்னை எல்லா இடங்களிலும் நம்பினார். இந்திய கேப்டன் என்னை நம்புவது வேறு. ஆனால் வெளியில் இருந்து வந்த ஒருவர் என்னை நம்புவது பெரிய விஷயம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. புதிய கேப்டன்.. 15 பேர் கொண்ட இளம் இந்திய அணி அறிவிப்பு.. 4 புதுமுக வீரர்கள்.. சீனியர் வீரர்களுக்கு இடமில்லை

மேலும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அணி கூட்டத்தில் பேசிய கம்மின்ஸ் பவுலர்கள் 40 அல்லது 50 ரன்கள் தருவது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. அணிக்கு அவர்கள் என்ன செய்ய முடிய வேண்டும் என்று பார்ப்பது தான் முக்கியம் என்று பேசினார். என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு பின்னால் இருப்பேன் என்று அவர் பேசியது அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று என்னை நினைக்க வைத்தது” என்று கூறியிருக்கிறார்.