கிரிக்கெட்

தனது கிராமத்து மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மைதானத்தைக் கட்டியுள்ள நட்ராஜன்

ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினால், நிச்சயமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவரை தேடி வரும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நமது தமிழ் நாட்டு வீரர் தங்கராசு நடராஜன் அமைந்தார். ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக மிக சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் நடராஜன் ஈர்த்தார். பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வகை கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் களமிறங்கி விளையாடினார். ஒரே ஆண்டில் இந்த அளவுக்கு அவர் வளர்ந்ததற்கு முழு காரணம் அவரது திறமை ஒன்று மட்டுமே.

தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதியும் உடைய கிரிக்கெட் மைதானம்

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியில் பிறந்த தங்கராசு நடராஜன் கிரிக்கெட் விளையாட தொடங்கி படிப்படியாக ஐபிஎல் தொடர் வரை சென்று, அங்கு தன்னுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி இந்திய அணியிலும் இடம் பெற்று சாதித்து காட்டியுள்ளார். ஆனால் தற்பொழுது இன்னும் ஒரு படி மேல் போய், தனது பிறந்த சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளும் உடைய ஒரு பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டமைக்க இருக்கிறார்.

இன்று மாலை தனது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த பதிவினை அவர் உறுதி செய்துள்ளார். அந்த பதிவில் “எனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளையும் உடைய ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருக்கிறேன். அந்த கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட் (NCG). கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பெற்று விளையாடினேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எனது கிராமத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க இருக்கிறேன். கனவுகள் அனைத்தும் நிறைவேறி இருக்கின்றன, கடவுளுக்கு நன்றி” என்று மகிழ்ச்சி பொங்க அவர் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அவரது பதிவுக்கு கீழ் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென நினைக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்ககு ( குறிப்பாக அவரது கிராமம் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு ) இந்த மைதானம் மிகப்பெரிய அளவில் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Published by