இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா குறித்து ஒரு விஷயத்தை தன்னால் நம்ப முடியவில்லை என இங்கிலாந்து முன்னால் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார். இது இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடருக்கு ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு வந்த ரோகித் சர்மா ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்து இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ரோகித் சர்மா முதல் இடத்திற்கு முன்னேறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக பார்க்கப்படும் அவர் தன்னுடைய 38 வது வயதில்தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசி உள்ள நாசர் ஹூசைன் ” ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் பிடித்துள்ளார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. நான் மற்றவர்களிடம் இதற்கு முன்னால் அவர் முதலிடத்தை பிடித்ததில்லையா? என்று கேட்டேன். ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே அவர் மூன்று இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார். இதுவரையில் வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாடிய சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்”
இதையும் படிங்க : கேகேஆர் அணிக்கு கேப்டன் ஆகும் ரோகித் சர்மா?.. உண்மை என்ன.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
“ரோகித் சர்மா இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுப்பதற்காக தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். அதிரடியாக விளையாடி தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பவர் பிளேவில் அதிகமாகும் படி செய்தார். மிகச் சிறந்த வீரரான அவருக்கு இன்னும் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.