இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் இங்கிலாந்து அணிக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார்.
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி முல்தான் மைதானத்தில் துவங்குகிறது. இதே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 15ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்திலும் நடக்க இருக்கிறது.
கடந்த முறை நடந்த வரலாற்று சோகம்
கடந்த முறை இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் பாகிஸ்தான் அணியை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் செய்து அசத்தியது.
மேலும் கடந்த முறைகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமான ஆடுகளங்களை அமைத்து இருந்தது. இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் முறைக்கு இப்படியான ஆடுகளங்கள் பெரிய உதவியாக அமைந்தது. ஹாரி புரூக் 4 சதங்கள் அடித்து நொறுக்கி இருந்தார். தற்போது பாகிஸ்தான் சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணியிடமே தோல்வி அடைகிறது.
அந்த முட்டாள்தனம் வேண்டாம்
இந்த நிலையில் நாசர் ஹூசைன் கூறும்பொழுது “பாகிஸ்தான் அணி எப்பொழுதும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட அணியாகவே இருந்திருக்கிறது. அனைத்து வடிவங்களிலும் அவர்கள் மிகவும் கீழே இருக்கிறார்கள்.அவர்களுக்கு கடைசியாக டி20 உலக கோப்பையும் மிக மோசமாகவே அமைந்திருந்தது”
“தற்பொழுது அவர்களுக்கு ஒரு புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய கேப்டன் கிடைத்திருக்கிறார்கள். அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் கடந்த எட்டு டெஸ்ட் போட்டிகளாக ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்தும் தற்போது விலகி இருக்கிறார். இப்படி நிலைமை பாகிஸ்தான் அணிக்கு மோசமாக இருந்தாலும் கூட, அந்த அணியை எளிதில் வென்று விடலாம் இன்று இங்கிலாந்து அணி நினைத்தால் அது பெரிய முட்டாள்தனமாகவே அமையும்”
இதையும் படிங்க : 40 ஓவரில் போட்டியை மாற்றிய ருதுராஜ் அணி.. மீண்டும் களத்தில் சர்பராஸ் கான்.. திரில் நிலையில் இரானி கோப்பை 2024
“பாகிஸ்தான் மிகவும் பெருமை வாய்ந்த கிரிக்கெட் தேசம். தற்பொழுது அவர்கள் இருக்கும் நிலையை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதே சமயத்தில் தங்கள் சொந்த நாட்டில் பெரிய சக்தியாக விளங்குவார்கள். மேலும் அவர்களால் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் நினைக்கிறேன். பென் ஸ்டோக்ஸ் அணியிடம் என்னை எதிர்பார்க்கலாம் என்றும் தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.
,