கடைசி டெஸ்டில் முக்கிய வீரர் விலகல்! அணிக்கு மீண்டும் பின்னடைவு!

0
484

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார் என்று அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

சுமார் 17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சிறப்புமிக்க பெருமை இங்கிலாந்து அணிக்கு கிடைக்கும்.

ஆகையால் அத்தகைய வெற்றியை பெறுவதற்கு கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம் இருவரும் தீவிர திட்டங்களில் இறங்கியுள்ளனர் என தகவல்கள் வந்திருக்கிறது.

அதேநேரம் இரண்டு தோல்விகளுடன் மோசமான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் அணி, குறைந்தபட்சம் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பிலும் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் மூன்றாவது போட்டி துவங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. 19 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் நசிம் சா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு தசைப்பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை.

நசீம் சா மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது. இன்னும் அவருக்கு உண்டான தசைப்பிடிப்பு குணமடையவில்லை என்ற தகவல்கள் வந்திருக்கிறது.

இங்கிலாந்து அணி தனது வேகப்பந்து வீச்சின் மூலம் தாக்குதல் ஏற்படுத்தி எளிதாக வெற்றியை பெற்று விடுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியால் தனது சொந்த மண்ணில் அதை செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறது. இந்த சூழலில் இப்படி ஒரு முக்கியமான வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது கூடுதல் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நசிம் சா பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உள்ளே வந்த சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தினார். ஆகையால் தொடர்ந்து அவரே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கப்படலாம் என தெரிகிறது.