134 ரன்.. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் முதல் தோல்வி.. நமிபியா நம்ப முடியாத வெற்றி.. இது தேவையா?

0
12
SA

நமீபியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது.

தற்போது தென் ஆப்பிரிக்காவின் முக்கிய அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. நாளை இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு தென் ஆப்பிரிக்கா அணி தங்களது சொந்த மண்ணில் நமீபியா அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

- Advertisement -

திரும்பி வந்த குயின்டன் டி காக்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பி வந்த குயின்டன் டி காக் 4 பந்தில் 1 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லுகான் பிரிட்டோரியஸ் 22 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.

மிடில் வரிசையில் ரூபன் ஹர்மன் 18 பந்தில் 23 ரன்கள், ஜெ ஸ்மித் 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. நமிபியா அணி பந்துவீச்சில் ட்ரம்ப்ள்மான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

கடைசிப் பந்தில் வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாடிய நமிபியா அணிக்கு மாலன் குர்கர் 21 பந்தில் 18 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் சேன் கிரீன் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 30 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் நமிபியா அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவ வெறும் 3 பந்துல அவுட் பண்ணுவேன்.. என்கிட்ட முடியாது – பாகிஸ்தான் பவுலர் பேட்டி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 5 பந்தில் 10 ரன்கள் கிடைத்தது. கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் நமிபியா அணி அதை எடுத்து வெற்றி பெற்றது. மேலும் ஒரு அசோசியேட் நாட்டுக்கு எதிராக டி20 போட்டியில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -