அபிஷேக் ஷர்மாவ வெறும் 3 பந்துல அவுட் பண்ணுவேன்.. என்கிட்ட முடியாது – பாகிஸ்தான் பவுலர் பேட்டி

0
222
Abhishek

இந்திய டி20 தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தன்னுடைய பந்துவீச்சில் தாக்குப் பிடிக்க முடியாது என பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் இஷானுல்லாஹ் சவால் விட்டிருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபிஷேக் ஷர்மா அதிரடியான முறையில் விளையாடி அரைசதம் அடித்திருந்தார். மேலும் ஆசியக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

- Advertisement -

யார் இந்த இஷானுல்லாஹ்?

சில வருடங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 தொடரில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி எல்லோரது கவனத்தையும் இஷானுல்லாஹ் திருப்பி இருந்தார். அவர் அதிகபட்சமாக மணிக்கு 154 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இருந்தார். தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய திறமையை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரில் அவருக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு காயமடைந்த அவரால் தேசிய அணிக்கு திரும்பி வர முடியவில்லை. மேலும் பிஎஸ்எல் தொடரிலும் அவரை யாரும் வாங்காமல் விட்டது பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா தாக்கு பிடிக்க மாட்டார்

தற்போது காயத்தின் காரணமாக பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பிஎஸ்எல் தொடரில் எந்த அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் இஷானுல்லாஹ் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக இது குறித்து மிகவும் வருத்தத்துடன் பேட்டி அளித்திருந்தார்.

இதையும் படிங்க : 48 இன்னிங்ஸ்.. அறிமுகத்திலிருந்து ஆட்சி செய்யும் ஜெய்ஸ்வால்.. ஜோ ரூட்டையும் தாண்டி சாதனை

இந்த நிலையில் திடீரென அபிஷேக் சர்மா குறித்து பேசி இருக்கும் அவர் “அபிஷேக் ஷர்மா என்னுடைய ஓவர் முழுவதையும் தாக்குப்பிடித்து விளையாட முடியாது. அவரை நான் முதல் மூன்று பந்தியிலேயே அவுட் செய்து வெளியே அனுப்பி விடுவேன்” என்று சவால் விடும் வகையில் பேசியிருக்கிறார்.

- Advertisement -