இலங்கை அணியை பங்கம் செய்த கத்துக்குட்டி நமீபியா அபார வெற்றி!

0
3250

டி20 உலக கோப்பை தொடரின் குரூப் சுற்றில் இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது நமீபியா.

ஐசிசி தரவரிசை பட்டியலின்படி முதல் எட்டு இடம் பிடித்த அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்று இருக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதம் இருக்கும் எட்டு அணிகளில் 4 அணிகள் குரூப் சுற்றில் விளையாடி தகுதி பெற்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழையும். தற்போது நடைபெற்று வரும் குரூப் சுற்றில் முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா இரு அணிகளும் மோதின.

- Advertisement -

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நமீபியா அணிக்கு துவக்கம் சரிவர அமையவில்லை. ஆனால் மிடில் ஓவரில் அவ்வபோது சீரான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயரே எடுத்துச் சென்றனர். அதிகபட்சமாக ஜான் ஃப்ரைலிங்க் 44 ரன்களும், ஒன்பதாவது வீரராக களம் இறங்கிய ஸ்மித் 16 பந்துகளில் 31 ரன்களும் அடித்து அணிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

இலக்கை துரத்திய இலங்கை அணி நமீபியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. மிடில் ஆர்டரில் கேப்டன் சனங்கா அதிகபட்சமாக 29 ரன்களும் ராஜபக்சே 20 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றுவிட்டது.

ஆசியகோப்பையை வென்று பலமிக்க அணியாக காணப்பட்ட இலங்கை அணிய எளிதாக நமீபியா அணியை வீழ்த்தி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்படியே மாற்றாக, நமீபியா அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை டி20 தொடரின் முதல் போட்டி இப்படி மிகவும் சுவாரசியமாகவும் எதிர்பார்ப்பை மீறியும் அமைந்திருப்பதால் மீதம் இருக்கும் போட்டிகளின் மீதும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

- Advertisement -