இந்திய கிரிக்கெட்

5.20 கோடி.. நான் கனடாவுக்கு போய் இருப்பேன்.. மும்பை இந்தியன்ஸ்தான் தடுத்தது – நமன் திர் பேட்டி

2023 ஐபிஎல் மினி ஏலத்தில் தன்னை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருக்காவிட்டால் தான் கனடா போய் இருப்பேன் என அந்த அணியின் வீரர் நமன் திர் உருக்கமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த 2024 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நம்மன் திர்ரை மீண்டும் ஏலத்தில் சென்று 5 புள்ளி 20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இது அவர் மேல் அந்த அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

2023 ஐபிஎல் மினி ஏலம்

கடந்த சில வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் பஞ்சாப் மாநிலம் மிகச்சிறப்பாக மாறி வருகிறது. இதை சரியாக நோட்டமிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 2023 ஐபிஎல் மினி ஏலத்தில் நமன் திர், அதற்கு முன்பாக நெகேல் வதேரா போன்றவர்களை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கொண்டு வந்தது.

நமன் திர் பஞ்சாப் மாநில கிரிக்கெட்டில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் மட்டுமே இடம்பெற்று விளையாட முடிந்தது. ஆனால் அவருக்கு பஞ்சாப் மாநில அணியில் வாய்ப்புகள் மேற்கொண்டு கிடைக்கவில்லை. உள்ளூரில் நடைபெறும் பிரபல டி20 தொடர்களில் மட்டுமே கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார். இதை வைத்து அவரை மும்பை இந்தியன்ஸ் வாங்கி அவரது வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.

- Advertisement -

கனடா போய் இருப்பேன்

இதுகுறித்து நமன் திர் கூறும் பொழுது “பஞ்சாபின் பாதி பேர் கனடாவுக்கு செல்ல விரும்புகிறார்கள். இதில் நானும் ஒருவனாகவே இருந்தேன். 2022-ல் நான் ஏறக்குறைய கிரிக்கெட்டை விட்டுவிட்டேன். என் கனடா எட்மண்டில் வசிக்கிறார். நான் அங்கு செல்லவே திட்டமிட்டு இருந்தேன். இந்த விஷயத்தில் என் தந்தை என்னையே முடிவெடுக்க சொல்லி இருந்தார். ஆனால் அடுத்த வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் என்னை தேர்ந்தெடுத்தது”

இதையும் படிங்க : ஆஸி மீடியா பும்ராவ உட்கார வச்சிக்கிட்டே அவரை மதிக்கல.. அவங்க எண்ணமே வேற – நாசர் ஹுசைன் பேட்டி

“ஏலத்தின் போது என்னுடைய இதயம் துடித்துக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எனக்கு ஒரு நல்ல சீசன் இருந்தது. நான் எப்படியும் ஐபிஎல் ஒப்பந்தத்தை பெறுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு பணம் பெறுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts